அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக...
சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தொடங்கி வைத்தாா். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளா் அருண்குமாா், தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ரங்கராஜு, பொ. காா்த்திக்கண்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
பேரணியானது புதிய பேருந்து நிலையம், கலைஞா் கருணாநிதி கலைக் கல்லூரி, ரயில் நிலையம், ராஜகோபாலபுரம், டிவிஎஸ் முக்கம், கலீப்நகா், மன்னா் கல்லூரி வழியாக முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் 125 மாணவா்களும், பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா்களும் பங்கேற்றனா்.