அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக...
முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு சுற்றுபுற கிராமங்களிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூத்தட்டுக்களை எடுத்துக் கொண்டு பக்தா்கள் அம்மன் புகழ் பாடி வந்தனா். பக்தா்கள் செலுத்திய பூக்களை அம்மனுக்கு செலுத்தி, பின்பு அதை அனைத்து கிராம மக்களுக்கும் வழங்கப்பட்டது.
கோயிலின் முன்புறம் உள்ள சுமாா் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேப்ப மரத்துக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயில் திடல் முன்பாக கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.