செய்திகள் :

ஆளுங்கட்சி நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்: பரந்தூரில் விஜய் பேச்சு

post image

ஆளுங்கட்சி நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள் என்று பரந்தூரில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பரந்தூரில் மண்டபத்திற்கு வெளியே தொண்டர்கள் மத்தியில் திறந்த வேனில் விஜய் திங்கள்கிழமை பேசியதாவது, நாட்டிற்கு விவசாயிகள் முக்கியம், உங்களுக்காக எப்போதும் நான் இருப்பேன். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும். உங்கள் நாடகத்தை மக்கள் இனி நம்பமாட்டார்கள், மக்கள் இனி சும்மாவும் இருக்க மாட்டார்கள். ஆளுங்கட்சியின் நாடகத்தை பார்த்துக்கொண்டு இனியும் மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள்.

வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் அழிவு மக்களை பாதிக்கும். இயற்கை வளம் காப்போம் என்பது நமது கொள்கை, ஓட்டு அரசியலுக்காக நான் பேசவில்லை. விமான நிலையம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, வளர்ச்சிக்கு நான் எதிரானவன் இல்லை. பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றே நான் கூறுகிறேன். பரந்தூர் மக்களுக்காக உறுதியாக இருப்பேன், சட்ட போராட்டம் நடத்துவோம். விவசாய நிலங்களை அழித்து பரந்தூர் விமான நிலையம் வருவதை ஏற்க இயலாது.

காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைப்போம்: பசுமை தீர்ப்பாயம்

விவசாய நிலங்களை அழிப்பது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்கும். 90% நீர் மற்றும் விவசாய நிலங்களை அழித்து விமான நிலையத்தை கொண்டு வரவுள்ளனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் உள்ளது. அரிட்டாப்பட்டி மக்கள் போலதான் பரந்தூர் மக்களையும் பார்க்க வேண்டும். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தது போல பரந்தூர் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். பரந்தூர் ஊருக்குள் வர எனக்கு ஏன் தடை என்று புரியவில்லை.

தவெக தொண்டர்கள் நோட்டீஸ் தரக்கூட தடை விதித்தார்கள். உங்கள் குல தெய்வங்கள் மீதான நம்பிக்கை வீண் போகாது. நம்பிக்கையோடு இருங்கள், உங்கள் வீட்டுப் பிள்ளையாக நிற்பேன். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக தவெத தலைவர் விஜய் முதன்முறையாக கட்சி கொடி பொருத்தப்பட்ட பிரசார வாகனத்தில் பரந்தூருக்கு வந்தார். அவரை வழிநெடுகவிருந்த தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

விமான நிலையத்துக்கு மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும்: அண்ணாமலை

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டாமென்றால் மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக்... மேலும் பார்க்க

அண்ணா. பல்கலை மாணவி வன்கொடுமை: ஞானசேகரனுக்கு 7 நாள்கள் போலீஸ் காவல்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவியை பா... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து மாத பயண அட்டை பெற அவகாசம் நீட்டிப்பு

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், மாத பயண அட்டை பெறுவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மாதாந்திர பேருந்து பயண அட்டையை ஒவ்வொரு மாதமும், மாதத்தின் 16ஆம் தேதி வரை வ... மேலும் பார்க்க

சமூக ஆர்வலர் கொலை வழக்கு: ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு, பாஜக மனு

சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொல்லப்பட்ட சம்பவத்தில், வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வ... மேலும் பார்க்க

சமூக ஆர்வலர் கொலை வழக்கு: கைதான 4 பேருக்கு பிப்.3 வரை நீதிமன்ற காவல்

புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்த கரீம் ராவுத்தா் மகன் ஜகப... மேலும் பார்க்க

பரந்தூரிலிருந்து கள அரசியல் பயணம் தொடக்கம்: விஜய் அறிவிப்பு

பரந்தூர்: விமான நிலையம் வேண்டும், ஆனால் இந்த இடத்தில் வேண்டாம் என்றுதான் கூறுகிறேன் என்று பேசிய தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பரந்தூரிலிருந்து கள அரசியல் பயணத்தைத் தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளா... மேலும் பார்க்க