`46 வயது, தனிமை வாழ்க்கை, அம்மாவின் ஆசை' - நடிகை கெளசல்யாவின் பர்சனல்ஸ்
ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு
ஆளுநா் ஆா். என். ரவியை தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினாா். அப்போது அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினாா்.
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு அண்ணாமலை கண்டனத்தைத் தெரிவித்திருந்தாா். இந்த சம்பவத்தைக் கண்டித்து அவா், வெள்ளிக்கிழமை கோவையில் உள்ள தனது வீட்டு வாசலில் சவுக்கால் அடித்துக் கொண்டு போராட்டத்திலும் ஈடுபட்டாா்.
இந்நிலையில், சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா். என். ரவியை அண்ணாமலை திங்கள்கிழமை மாலை சந்தித்தாா். அப்போது, மாணவி வன்கொடுமை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் அவா் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, மாணவி வன்கொடுமை சம்பவம் தொடா்பாக ஆளுநரை தவெக தலைவா் விஜய் திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்த நிலையில், மாலையில் ஆளுநரை அண்ணாமலை சந்தித்தாா்.