ஆளுநர்கள் மாற்றம்!
கேரளம் மாநில ஆளுநர் உள்பட 4 மாநில ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கேரள மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர், பிகார் மாநில ஆளுநராக பதவி வகித்தார்.
செல்போன் ரீசார்ஜ் திட்டத்தில் மாற்றம்! அதிக கட்டணம் தேவையில்லை!
அதேபோல், பிகார் மாநில ஆளுநராக ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே கேரள மாநில ஆளுநராக பதவி வகித்தவர்.
மேலும் மிசோரம் மாநில ஆளுநராக முன்னாள் ராணுவ தளபதி விஜய் குமார் சிங்கும், மணிப்பூர் மாநில ஆளுநராக அஜய் குமார் பல்லாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.