செய்திகள் :

ஆளுநர் பதவியிலிருந்து சி.பி. ராதாகிருஷ்ணன் ராஜிநாமா: குஜராத் ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!

post image

குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த செப்.9 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் அவர் 452 வாக்குகளைப் பெற்று குடியரசு துணைத் தலைவராகத் தேர்வாகியுள்ளார். அவருக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளைப் பெற்றார்.

குடியரசு துணைத் தலைவராகத் தேர்வானதால், சி.பி. ராதாகிருஷ்ணன் தனது மகாராஷ்டிர ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இதையடுத்து குஜராத் ஆளுநருக்கு மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆச்சார்ய தேவவிரத் முதலில் குஜராத் மாநில ஆளுநராகவும் பின்னர் ஹிமாசலப் பிரதேச ஆளுநராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Gujarat Governor gets additional charge of Maharashtra

இதையும் படிக்க | தொடரும் தாக்குதல்! காஸாவில் இருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றம்?

சத்தீஸ்கரில் 8 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில், 8 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் கரியாபந்து மாவட்டத்தில், சிறப்பு அதிரடிப் படை மற்றும் சி.ஆர்.பி.எஃப். கோப்ரா பட... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பேரிடருக்கு ரூ.1,200 கோடி நிவாரணம்! பிரதமர் மோடி அறிவிப்பு!

உத்தரகண்ட் மாநிலத்துக்கு, பேரிடர் பாதிப்புகளைச் சரிசெய்ய நிவாரண நிதியாக ரூ.1,200 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். உத்தரகண்டில் பருவமழையின் தீவிரத்தால், மேகவெடிப்பு, கனமழை... மேலும் பார்க்க

மணிப்பூர்: பிரதமர் வருகையின்போது பாஜக நிர்வாகிகள் 43 பேர் ராஜிநாமா ஏன்?

மணிப்பூரில் 40-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் ராஜிநாமா செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, இந்த வார இறுதியில் மணிப்பூர் செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், மணிப்பூரில... மேலும் பார்க்க

சாலைகளைச் சீரமைக்கும் வரை சுங்கக் கட்டண வசூல் இல்லை! - தடையை நீட்டித்த கேரள உயர்நீதிமன்றம்

தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை பளியக்கரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சுங்கக் கட்டண வசூல் தடையை செப். 15 வரை நீட்டித்துள்ளது கேரள உயர்நீதிமன்றம். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்த... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்த தீர்ப்பு மீது, குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சட்டப் பேரவைகளில் நிறைவேற... மேலும் பார்க்க

ரேபரேலியில் மாவட்ட வளர்ச்சி கூட்டம்: ராகுல் காந்தி தலைமை தாங்கினார்!

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகு... மேலும் பார்க்க