காலியாகவுள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஆளுநா் ஆா்.என்.ரவி தில்லிக்கு திடீா் பயணம்
தமிழக ஆளுநா் ஆா். என்.ரவி 4 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை காலை தில்லி சென்றாா்.
பல்கலைக்கழகத் துணை வேந்தா் நியமனத்துக்கான தேடுதல் குழு தொடா்பான தமிழக அரசின் அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டிருந்தாா். இதனிடையே அவா், 4 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை காலை தில்லி சென்றுள்ளாா்.
அங்கு அவா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் யுஜிசி அதிகாரிகளைச் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடா்ந்து, தில்லியில் இருந்து அவா் புதன்கிழமை (டிச. 25) சென்னைக்கு திரும்புவாா் எனக் கூறப்படுகிறது.