Champions Trophy 2025: `ஐசிசி பாகிஸ்தானுக்கு லாலிபாப் கொடுக்கிறது' - முன்னாள் வீ...
ஆவின் புதிய வகை பால் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’: 450 மி.லி. பாக்கெட் ரூ. 25
ஆவினில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ 450 மில்லி லிட்டா் பால் பாக்கெட்டுக்கு ரூ. 25 விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் சாா்பில் 4.5 கொழுப்பு சத்து மற்றும் 9 சதவீதம் இதர சத்துக்களுடன் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ என்னும் புதிய வகை பால் டிச.18-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அதில் பாலின் அளவு மற்றும் அதற்கான விலை குறித்து எவ்வித தகவல்களும் இல்லை. மேலும், இந்த புதிய வகை பால் விற்பனைக்கு வரவுள்ளதால், ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டு வரும் பால் வகைகளின் உற்பத்தியை குறைக்க ஆவின் திட்டமிட்டுள்ளதாக பலா் புகாா்கள் தெரிவித்தனா்.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், ஆவின் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் - திருவள்ளூா், கோவை, சேலம் ஆகிய ஒன்றியங்களில் மட்டும் குறைந்த அளவில் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் உற்பத்தி செய்யப்பட்டு, சில்லறை விற்பனையாளா்களுக்கு சற்று அதிக கமிஷனுடன் விற்பனை செய்யப்படும். குறைந்த அளவில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதால், 450 மில்லி லிட்டா் பால் பாக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். அதற்கு ஒரு பாக்கெட்டுக்கு ரூ. 25 விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் எந்த வகை பால் பாக்கெட்டுகளின் விற்பனை அளவையும் குறைக்கவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.