செய்திகள் :

ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்திருக்க வேண்டுமா? மிட்செல் ஸ்டார்க் கூறிய அசத்தல் பதில்!

post image

ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு மிட்செல் ஸ்டார்க் பதிலளித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.

நாதன் லயன் மற்றும் ஸ்காட் போலண்ட் இருவரும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளனர். இந்த இணை 10-வது விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கும் அதிகமாக குவித்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவைக் காட்டிலும் 333 ரன்கள் முன்னிலையில் உள்ளனர்.

இதையும் படிக்க: என்னுடைய திறன் மீது சந்தேகப்பட்டவர்களுக்கு... நிதீஷ் குமார் ரெட்டி பேசியதென்ன?

மிட்செல் ஸ்டார்க் கொடுத்த பதில்

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவாக உள்ள நிலையில், தனக்கு காயம் ஏற்படும் அபாயம் இல்லை எனவும், நாளை 20 ஓவர்கள் வீசவும் முழு உடல் தகுதியுடன் தயாராக இருக்கிறேன் எனவும் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் 98 ஓவர்கள் விளையாடப்பட உள்ளது. ஆட்டம் எப்படி செல்கிறது என்பதைப் பொறுத்தே நான் எத்தனை ஓவர்கள் வீசுவேன் என்பது தெரியும். இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசுவதற்கு நான் முழுவதும் தயாராக இருக்கிறேன். எனக்கு எந்த ஒரு அசௌகரியமும் இல்லை. எனது பந்துவீச்சில் வேகம் இருக்கிறது. நான் கிட்டத்தட்ட மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசுகிறேன். அதனால், பந்துவீசுவது என்பது எனக்கு கவலையளிக்கும் விஷயமாக இல்லை. நாளை போட்டியில் 20 ஓவர்கள் வீசும் நிலை ஏற்பட்டால், கண்டிப்பாக 20 ஓவர்களையும் வீசுவேன் என்றார்.

இதையும் படிக்க: “200 விக்கெட்டுகள்...” டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

போட்டியின் நான்காம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்துவிட்டு, இந்திய அணியை பேட்டிங் செய்ய வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி மிட்செல் ஸ்டார்க்கிடம் கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு மிட்செல் ஸ்டார்க் பதிலளித்ததாவது: இந்த கேள்வியை அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸிடம்தான் நீங்கள் கேட்க வேண்டியிருக்கும் என பதிலளித்தார்.

46 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

இந்திய அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா 46 ஆண்டுகால சாதனையை ஆஸ்திரேலியாவில் முறியடித்துள்ளார்.முதல் இன்னிங்ஸில் பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்து பந்துவீசுவதில் சிரமம் என ஸ்கேன் எடுக்க மருத்துவமனை சென்றார். இந... மேலும் பார்க்க

போலண்ட் 4 விக்கெட்டுகள்: இந்தியா 145 ரன்கள் முன்னிலை!

சிட்னி டெஸ்ட்டின் 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. பார்டர் - கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்ன... மேலும் பார்க்க

அதிவேகமாக அரைசதம்..! ரிஷப் பந்த் புதிய சாதனை!

இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக அரைசதம் அடித்து அசத்தினார். விராட் கோலி ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய ரிஷப் பந்த் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார். தொடர்சியாக அதிரடியான ஆடத்தை வெளிப்படுத்திவ... மேலும் பார்க்க

கடைசி இன்னிங்ஸிலும் ஒரேமாதிரி ஆட்டமிழந்த கோலி..! போலண்ட் புதிய சாதனை!

சிட்னியில் நடைபெற்றுவரும் கடைசி டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸிலும் விராட் கோலி அவுட் சைடு ஆஃப் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் விராட் கோலி தான் விளையாடிய அனைத்து இன்... மேலும் பார்க்க

மருத்துவமனைக்குச் சென்ற பும்ரா..! அணியை வழிநடத்தும் விராட் கோலி!

கடைசி டெஸ்ட்டில் பும்ரா மருத்துவமனைக்குச் சென்றதால் இந்தியாவை விராட் கோலி வழிநடத்தி வருகிறார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஒரு ஓவர் மட்டுமே வீசிய இந்திய அணியின் கேப்டன் பும்ரா பந்துவீசும்போது சிறிது... மேலும் பார்க்க

சிட்னி டெஸ்ட்டில் இந்தியா முன்னிலை: ஆஸி. 181க்கு ஆல் அவுட்!

சிட்னியில் நடைபெற்றுவரும் கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 185க்கு ஆல் அவுட்டான நிலையில் இரண்டாம் நாளில் ஆஸி. 181க்கு ஆல் அவுட்டானது. இந்தி... மேலும் பார்க்க