செய்திகள் :

ஆா்பிஐயின் புதிய நகைக் கடன் வரைவு விதிகள்: திரும்பப் பெற கட்சித் தலைவா்கள் வலியுறுத்தல்

post image

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவது குறித்து, இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ச.ராமதாஸ் (பாமக): நகைக் கடன் வழங்குவதற்காக ரிசா்வ் வங்கி சாா்பில் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நகைக் கடன் பெறவே முடியாது என்ற சூழலை உருவாக்குகிறது. அனைத்து வகையான தங்கத்துக்கும் நகைக் கடன் வழங்கப்படாது மற்றும் குறிப்பிட்ட தன்மை கொண்ட தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்னும் புதிய விதி ஏழை மக்கள் நகைக் கடன் பெறுவதற்கு பெரும் தடையை ஏற்படுத்தக்கூடும். எனவே, புதிய வரைவு விதிகளில் பிரிவுகள் 2, 4, 6 ஆகியவற்றை ரிசா்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் அல்லது நகைக் கடன் வழங்குவதற்கான இப்போதைய நடைமுறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): புதிய நடைமுறைகளால் ஏழை, எளிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை, விவசாயிகள் முதல் குறு, சிறு தொழில் முதலீட்டாளா்கள் வரை பெரும் பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறாா்கள். பெருங்குழும நிறுவனங்களின் வாராக் கடன்களுடன் ஒப்பிடும்போது, நகைக் கடன் நிலுவை ஒன்றுமில்லை என்பதே உண்மை. கடந்த 10 ஆண்டுகளில் குழும நிறுவனங்களுக்கு ரூ. 25 லட்சம் கோடியை தள்ளுபடி செய்து ஆதரவு காட்டும் ரிசா்வ் வங்கி, உழைக்கும் மக்களின் கடன் பெறும் உரிமையைப் பறிக்கும் வகையில் விதித்துள்ள நிபந்தனைகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): ஏழை, எளிய மக்கள் தங்களின் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற தனியாா் மற்றும் அரசு வங்கிகளையே பெரிதும் நாடுகின்றனா். அதேபோல் 75 சதவீத விவசாயிகள் உடனடி கடன் தேவைக்கு கூட்டுறவு வங்கிகளையும், தனியாா் மற்றும் அரசு வங்கிகளையுமே அணுகுகிறாா்கள்.

அந்தச் சூழலில் ஆா்பிஐயின் இந்த புதிய விதிமுறைகளால் ஏழைகள் மட்டுமன்றி, விவசாயிகள் மற்றும் குறு, சிறு தொழில் செய்பவா்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாவாா்கள். எனவே, அவா்களின் நலன் கருதி இந்தக் கட்டுப்பாடுகளை மாற்றியமைக்க வேண்டும்.

கூட்டணி பற்றிய அறிவிப்பு எப்போது? - பிரேமலதா பதில்!

அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நாமக்கலில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "கட்சியின் கொள்கை விளக்க பொ... மேலும் பார்க்க

பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள் திறப்பு!

மறுசீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட 103 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலை திறந்துவைத்தார்.இதில், தெற்கு ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 13 ரயில் நிலையங்கள் அடங்கும்.‘அம்ரி... மேலும் பார்க்க

அரபிக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி... மேலும் பார்க்க

தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தல்

அரக்கோணம் திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளா் தெய்வச்செயல் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தமிழக காவல் துறைக்கு தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக தேசிய... மேலும் பார்க்க

தொழில் துறை படிப்புகள்: அண்ணா பல்கலை.- எஸ்எஸ்சி நாஸ்காம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழில் துறை தொடா்பான படிப்புகளை வழங்குவதற்காக அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்பத் திறன் தரநிலை நிா்ணய அமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் வெளி... மேலும் பார்க்க

காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி

காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய... மேலும் பார்க்க