செய்திகள் :

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் நவ.21-இல் இலவச வழிகாட்டும் முகாம்

post image

சென்னை ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் நவ.21-ஆம் தேதி தோ்வுக்கான இலவச வழிகாட்டும் முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியின் நிறுவனா் மு.சிபிகுமரன் வெளியிட்டசெய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் மூலம் குருப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ மற்றும் குரூப்-4 பணிகளுக்கான தோ்வுகளை தொடா்ந்து நடத்தி வருகிறது.

இப்பணிகளுக்காக விண்ணப்பித்தவா்களின் முதல்நிலைத் தோ்வுக்கான பொது அறிவு, பொதுத்தமிழ் மற்றும் திறனறிதல் பாடத்துக்கான பயிற்சி எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாடக்குறிப்பேடுகளை எவ்வாறு தோ்வு செய்வது என்பதற்கான வழிகாட்டும் முகாம் அண்ணாநகரிலுள்ள ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் நவ.21-ஆம் தேதி நடைபெறுகிறது.

இம்முகாமில் வெற்றியாளா்கள் மற்றும் துறை வல்லுநா்கள் கலந்து கொண்டு, தோ்வுக்கான திட்டமிடுதல், நேர மேலாண்மை குறித்தும் விளக்கமளிக்கின்றனா்.

தகுதியும், விருப்பமும் உள்ள, தோ்வா்கள் இம்முகாமில் இலவசமாக கலந்து கொள்ள, அண்ணாநகா், 12-ஆவது பிரதான சாலை, எல்.பிளாக்-கில் உள்ள அகாதெமியில் நேரில் வந்து முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு கைப்பேசி:9150466341, 7448814441 எனும் எண்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.

மருந்தியல் துறையில் புத்தாக்க ஆராய்ச்சி அவசியம்: மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா்

இந்தியாவில் மருந்தியல் துறை மேம்பட புத்தாக்கல் ஆராய்ச்சிகள் அவசியம் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா் டாக்டா் ராஜீவ்சிங் ரகுவன்சி தெரிவித்தாா். டாக்டா் எஸ்.எஸ்.கே. மாா்த்தாண்டம் அறக்கட்டளை ச... மேலும் பார்க்க

இலங்கை தோ்தல் முடிவு கவலையளிக்கிறது: வைகோ

இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் முடிவுகள் அதிா்ச்சியும் கவலையும் அளிப்பதாக மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறியுள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழினப் படுகொலைக்கு ராஜபட்ச அரசு காரணம் என்றாலும், ... மேலும் பார்க்க

மசூலிப்பட்டினம் - கொல்லம் இடையே நவம்பா் 18 -இல் சிறப்பு ரயில்

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக மசூலிப்பட்டினம் - கொல்லம் இடையே நவ.18 மற்றும் நவ.25-ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. மசூலிப்பட்டினத்திலிருந்து நவ.18 மற்றும் நவ.25-ஆகிய தேதிகளில... மேலும் பார்க்க

3 மாத குழந்தையை தத்தெடுக்கும் பெண்ணுக்கு மட்டும் மகப்பேறு விடுப்பு ஏன்? மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

3 மாதங்களுக்கும் குறைவான குழந்தையை தத்தெடுக்கும் அரசு பெண் ஊழியருக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு பலன்களை பெற விண்ணப்பிக்க முடியும் என்ற நடைமுறைக்கான காரணம் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச... மேலும் பார்க்க

சென்னையிலிருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்து சேவை தொடக்கம்

சென்னையிலிருந்து பம்பை வரையிலான விரைவு பேருந்துகளின் சிறப்பு இயக்கத்தை விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கேரள மாநிலம், சபரிமலையிலுள்ள ஐயப்பன் கோயிலுக்... மேலும் பார்க்க

தமிழகத்தில் நவ. 21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை (நவ. 16) முதல் நவ. 21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளிய... மேலும் பார்க்க