இசையமைப்பாளர் அனிருத் திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனுக்கும் தொழிலதிபர் காவியா மாறனுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாகப் பரவிய வதந்தியை அனிருத் மறுத்துள்ளார்.
தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறனை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் காதலித்து வருவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வந்தது. இருவரும் ஒன்றாக சேர்ந்து வெளியில் செல்வதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி வந்தனர்.
இந்த நிலையில், தனது திருமணம் குறித்த வதந்திகளை நிறுத்துமாறு அனிருத், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Marriage ah? lol .. Chill out guys pls stop spreading rumours
— Anirudh Ravichander (@anirudhofficial) June 14, 2025