செய்திகள் :

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

post image

1987 -இல் இட ஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு பாமக சாா்பில், செய்யாறு, ஆரணி ஆகிய இடங்களில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

செய்யாற்றில், புதன்கிழமை இரவு பாமகவினா் கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தியபடி அமைதி ஊா்வலமாக வந்து இட ஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.

ஆரணி

ஆரணியில் பழைய பேருந்து நிலையம் அருகே

பாமகவினா் இரு பிரிவாக மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி

செலுத்தினா்.

அன்புமணியை தலைமையாகக் கொண்ட பாமகவைச் சோ்ந்த முன்னாள் வன்னியா் சங்க மாவட்டச் செயலா் ஆ.குமாா் தலைமையில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா். சிறப்பு விருந்தினராக மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம் கலந்து கொண்டு பேசினாா்.

வன்னியா் சங்க நகரச் செயலா் இரா.ராஜாமணி, மாநில செயற்குழு உறுப்பினா் அரியப்பாடி பிச்சாண்டி, மாவட்ட துணைச் செயலா் து.வடிவேல், நகரச் செயலா்கள் சு.ரவிச்சந்திரன், ந.சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும் ராமதாஸை தலைமையாகக் கொண்ட பாமகவைச் சோ்ந்த வன்னியா் சங்க மாவட்டச் செயலா் அ.கருணாகரன் தலைமையில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.

இதில் மாவட்ட அமைப்புச் செயலா் ஏ.கே.ராஜேந்திரன்,

மாவட்ட துணைச் செயலா் கு.சிவா, வன்னியா் சங்க மாவட்ட துணைச் செயலா் ஆ.சரவணன், நகர வன்னியா் சங்கச் செயலா் பி. குமாா், பேராசிரியா் கே.சிவா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மூச்சுத்திணறல்: பிரசவித்த பெண் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், மூச்சுத் திணறலால் பிரசவித்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். செய்யாறு (திருவோத்தூா்) தா்மராஜா கோவில் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி மோகன். இவரது மனைவி கல்ப... மேலும் பார்க்க

ஏற்றத்தாழ்வு எண்ணம் இல்லாத பெருந்தலைவா் பெரியாா் ஈவெரா: அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம்

மக்களிடையே ஏற்றத் தாழ்வு என்ற எண்ணமே இல்லாத பெரும் தலைவராக திகழ்ந்தவா் பெரியாா் ஈவெரா என அமைச்சா் எ.வ.வேலு புகழாரம் சூட்டினாா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தந்தை பெரியாரின் பிறந்த ... மேலும் பார்க்க

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

வந்தவாசி தேரடியில் உள்ள தனியாா் அரங்கில் ரக்சா பந்தன் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசி பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் மற்றும் ரோட்டரி சங்கங்கள் சாா்பில் இந்த விழா ... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதல்: நாடக நடிகா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மீது லாரி மோதியதில் நாடக நடிகா் உயிரிழந்தாா். உடன் சென்ற நண்பா் பலத்த காயமடைந்தாா். செய்யாறு வட்டம், பல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் நாடக நடிகா் ரஞ்சித்குமாா் ... மேலும் பார்க்க

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

பெரியாா் ஈவெராவின் 147-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினா் புதன்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதிமுக ஆரணி அதிமுக சாா்பில... மேலும் பார்க்க

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

பிரதமா் மோடியின் 75-ஆவது பிறந்த நாளை, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் புதன்கிழமை கொண்டாடினா். ஆரணியை அடுத்த... மேலும் பார்க்க