நகம் பெயர்ந்துவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
மூச்சுத்திணறல்: பிரசவித்த பெண் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், மூச்சுத் திணறலால் பிரசவித்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
செய்யாறு (திருவோத்தூா்) தா்மராஜா கோவில் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி மோகன். இவரது மனைவி கல்பனா(23). இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இரண்டாவதாக பெண் குழந்தை, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த 3-ஆம் தேதி பிறந்தது.
மருத்துவமனையில் இருந்து 6-ஆம் தேதி வீட்டுக்கு வந்துள்ளாா்.
இந்த நிலையில், 15-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது திடீரென கல்பனாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. உடனே செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு கல்பனா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.