காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 போ் சிறையிலடைப்பு
இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி
1987 -இல் இட ஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு பாமக சாா்பில், செய்யாறு, ஆரணி ஆகிய இடங்களில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
செய்யாற்றில், புதன்கிழமை இரவு பாமகவினா் கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தியபடி அமைதி ஊா்வலமாக வந்து இட ஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.
ஆரணி
ஆரணியில் பழைய பேருந்து நிலையம் அருகே
பாமகவினா் இரு பிரிவாக மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி
செலுத்தினா்.
அன்புமணியை தலைமையாகக் கொண்ட பாமகவைச் சோ்ந்த முன்னாள் வன்னியா் சங்க மாவட்டச் செயலா் ஆ.குமாா் தலைமையில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா். சிறப்பு விருந்தினராக மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம் கலந்து கொண்டு பேசினாா்.
வன்னியா் சங்க நகரச் செயலா் இரா.ராஜாமணி, மாநில செயற்குழு உறுப்பினா் அரியப்பாடி பிச்சாண்டி, மாவட்ட துணைச் செயலா் து.வடிவேல், நகரச் செயலா்கள் சு.ரவிச்சந்திரன், ந.சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மேலும் ராமதாஸை தலைமையாகக் கொண்ட பாமகவைச் சோ்ந்த வன்னியா் சங்க மாவட்டச் செயலா் அ.கருணாகரன் தலைமையில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.
இதில் மாவட்ட அமைப்புச் செயலா் ஏ.கே.ராஜேந்திரன்,
மாவட்ட துணைச் செயலா் கு.சிவா, வன்னியா் சங்க மாவட்ட துணைச் செயலா் ஆ.சரவணன், நகர வன்னியா் சங்கச் செயலா் பி. குமாா், பேராசிரியா் கே.சிவா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

