செய்திகள் :

இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

post image

சென்னை: தொடக்கக்கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணைகளை சென்னை ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்ற விழாவில் துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழகினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு

ஒவ்வொரு மாணவரின் ஒளிமயமான எதிர்காலத்துக்கும் அடித்தளமிடுவது ஆரம்பக்கல்வி. இந்த அடித்தளத்தை மேலும் வலிமையாக்கிட ஆசிரியர் பணியெனும் அறப்பணியை தேர்ந்தெடுத்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்.

இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தின் மூலம் திராவிட மாடல் அரசு, சமூக நீதிக்கான அரசு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

தொடக்கக்கல்வியில் நூறு சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.

100 சதவீதம் பணியிடங்களை நிரப்பியுள்ளோம்

திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீட்டுகின்ற அனைத்து திட்டங்களும் வரலாற்றுச் சாதனையாக விளங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை வரலாற்றில் முதல் முறையாக மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளில் காலிப்பணியிடங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி, நூற்றுக்கு நூறு சதவீதம் இடைநிலை ஆசிரியர்களை நியமித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பணிக்காலம்தான் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் என முதல்வர் கூறியிருக்கிறார். அது மீண்டும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது என்றார்.

பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் முதல்வர் ஸ்டாலின்

திராவிட இயக்கத்திற்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு பெரிய பந்தம் உள்ளது. 1929 ஆம் ஆண்டே பெண்களை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாக மாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியவர் தந்தை பெரியார். பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்ற பெண்களுக்கு தொடக்கப்பள்ளியில் முன்னுரிமை வழங்கியவர் முத்தமிழறிஞர் கருணாநிதி. இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் கருணாநிதி வழியில் செயல்பட்டு வருகிறார்.

வாழ்க்கையை மாற்றிய கருணாநிதி கையெழுத்து

கருணாநிதி பேனாதான் மத்திய அரசின் ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை, மாநில அரசின் ஊழியர்களுக்கு பெற்றுக்கொடுத்தது. ஒரே ஒரு கையெழுத்து மூலம் 5000 பேர் பணி நியமனம் செய்தவர் கலைஞர். ஆனால் அதேபோல் ஒரு கையெழுத்து மூலம் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியவர் யார் என்று அனைவருக்குமே தெரியும்.

மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘திறன்’ மற்றும் ‘டிஎன் ஸ்பார்க்’ திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளோம்.

‘அகரம்’ மட்டுமின்றி உலகையும் சொல்லித்தருகிற வகையில் அவர்களின் பணி அமையட்டும். ஆசிரியர் சமுதாயத்துக்கு நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என்று துணை முதல்வர் கூறினார்.

2,430 இடைநிலை ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை: துணை முதல்வா் உதயநிதி வழங்கினார்

Deputy Chief Minister Udhayanidhi Stalin said that Tamil Nadu is the only state without 100 percent dropout rate in primary education.

அசைக்க முடியாத இயக்கமாக திமுகவை மாற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின் சூளுரை

எந்த இயக்கத்திலும் இளைஞர் அணியில் 5 லட்சம் நிர்வாகிகள் கிடையாது, இந்தியாவிலேயே அசைக்க முடியாத இயக்கமாக நம் திமுகவை மாற்றுவோம் என சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணிக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்ட... மேலும் பார்க்க

ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக 2,400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அப... மேலும் பார்க்க

நீர்பிடிப்புப் பகுதியில் மழை: திருநெல்வேலி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.நிகழாண்டு ... மேலும் பார்க்க

கார்கில் வெற்றி நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வீரவணக்கம்

கார்கில் வெற்றி நாளையொட்டி, நமது தாய்மண்ணை ஈடு இணையற்ற மனவுறுதியுடன் காத்து, உயிர்நீத்த துணிச்சல்மிகு இராணுவ வீரர்களுக்கு என் வீரவணக்கங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 1999-ஆம் ஆ... மேலும் பார்க்க

3-வது நாளாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. சனிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.73,280-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில்,... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 35, 400 கன அடியாக அதிகரித்துள்ளது.கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25,400 கன அடியிலிருந்து... மேலும் பார்க்க