செய்திகள் :

இட்லி கடை: ``அந்த அனுபவத்தில் சொல்கிறேன், தனுஷுக்கு அது நுணுக்கமாகத் தெரிகிறது" - அருண் விஜய்

post image

ப பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கும் நான்காவது படம் இட்லி கடை. இந்தப் படத்தில் முருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தனுஷுடன் அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, நித்யா மேனன், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் அருண் விஜய், ``ராயன் படத்தைப் பார்த்ததிலிருந்து தனுஷுடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன்.

தனுஷ்
தனுஷ்

எனது ஆசை இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது கதாபாத்திரத்துடன் அவர் சொன்ன கதை என்னை இந்தப் படத்திற்குள் கொண்டுவந்தது.

மிக முக்கியமாக, இட்லி கடை படம் ரசிகர்களுக்கு நெருக்கமான படமாக அமையும், அனைவராலும் விரும்பப்படும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

குறிப்பாக சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோருடன் முதல் முறையாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.

தனுஷ் ஒரு திறமையான மனிதர். அவரது படைப்புகளைப் பார்த்து நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன். ஒரு இயக்குநராக, கதையில் தனக்கு என்ன வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.

நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பைப் பெற வேண்டும் என்பதிலும் கராராக இருந்தார். மணிரத்னம், மகிழ் திருமேனி, கௌதம் மேனன், அறிவழகன் போன்ற பல மூத்த இயக்குநர்களுடன் நான் பணியாற்றியுள்ளேன்.

அந்த அனுபவத்தில் சொல்கிறேன். ஒரு காட்சியை எப்படி நன்றாக அமைக்க வேண்டும் என்பது அவருக்குத் நுணுக்கமாகத் தெரிகிறது.

ஜி.வி பிரகாஷ்
ஜி.வி பிரகாஷ்

எல்லாவற்றையும் அமைதியாகக் கையாண்டதால், நான் இன்னொரு அனுபவமிக்க இயக்குநருடன் பணிபுரிவது போல் உணர்ந்தேன்.

இந்தப் படம் அனைவருக்கும் ஒரு விருந்தாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். தனுஷும், ஜிவி பிரகாஷும் இணைந்தால் ஒரு மேஜிக் நடக்கிறது.

அந்த மேஜிக்கை இந்தப் படத்திலும் பார்க்கலாம். பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். ஆனால், படத்துடன் இணைந்து பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Singer Sathyan: "குழிதோண்டிப் புதைப்பது மாதிரியான செயல்; தயவுசெய்து செய்யாதீர்" - சத்யன் வருத்தம்

பாடகர் சத்யன் 26 ஆண்டுகளுக்கு முன்பாக மேடைக் கச்சேரி ஒன்றில்பாடிய ‘காதலர் தினம்’ படத்தில் இடம்பெற்ற ‘ரோஜா ரோஜா’ பாடலின் காணொலி கடந்த சிலவாரங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சத்யன், 1996 ஆம் ... மேலும் பார்க்க

Thandakaranyam: ``புதிய களம், புதிய கதை, சொல்லப்படாத கதாபாத்திரங்கள்" - நடிகை ரித்விகா

இரண்டாம் உலக்கப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில், நடிகர் கலையரசன், அட்டகத்தி தினேஷ், வின்சு, ரித்விகா, சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தண்டகாரண்யம்.இய... மேலும் பார்க்க

Idly Kadai: ``உங்களால வளர்ந்தவங்க நேருக்கு நேர் மோதினால்...." - தனுஷின் மேனேஜர் ஷ்ரேயாஸ்

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. அதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நேற்றைய தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

தண்டகாரண்யம்: "கலை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணம் நேபாளப் போராட்டம்" - பா.ரஞ்சித்

அதியன் ஆதிரை இயக்கத்தில் கலையரசன், தினேஷ், வின்சு, ரித்விகா, சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் வரவிருக்கும் திரைப்படம் தண்டகாரண்யம். வரும் செப்டம்பர் 19ம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்த நில... மேலும் பார்க்க

Idly Kadai: "தனுஷுக்குத் துரோகம் செய்யும் நான்கு பேர்" - ஜி.வி.பிரகாஷ் சொல்வது என்ன?

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. அதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நேற்றைய தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

Thandakaranyam: ``குக்கூ படத்துக்குப் பிறகு நடிப்பை மாற்றிக்கொண்டேன்" - நடிகர் தினேஷ்

இரண்டாம் உலக்கப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில், நடிகர் கலையரசன், அட்டகத்தி தினேஷ், வின்சு, ரித்விகா, சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தண்டகாரண்யம். இ... மேலும் பார்க்க