இட்லி கடை: ``நானும் தனுஷும் மதுரைல ரோட்டு கடையில சாப்பிடுவோம்!" - அருண் விஜய் ஷேரிங்ஸ்
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் `இட்லி கடை' படம் வருகிற அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.
அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

படம் ரிலீஸையொட்டி நடிகர் அருண் விஜய் விகடனுக்குப் பேட்டி அளித்திருக்கிறார். தனுஷ் குறித்தும் 'இட்லி கடை' குறித்தும் பல முக்கியமான விஷயங்களை அவர் பகிர்ந்திருக்கிறார்.
மதுரை என்றாலே சாப்பாடுதான்! மதுரையில் ஷூட் செய்த சமயத்தில் டயட்டை சீட் செய்துவிட்டு சாப்பிட்டீர்களா?'' என்ற கேள்விக்கு பதில் தந்த அருண் விஜய், அதெல்லாம் இருந்தது!
தனுஷ் பிரதர் ரோட்டுக் கடையில் சாப்பிடலாம் என ஷூட் முடித்துவிட்டு செல்லும்போது அவருடைய வண்டியை நிறுத்திவிடுவார்.
பிறகு நாங்களும் அங்கு வண்டியை நிறுத்திவிட்டு சாப்பிடுவோம். பரோட்டா - சால்னா என சாப்பிட்டுக் கொண்டேதான் இருந்தோம்.

அங்கு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஜிம் இல்லை. அதனால் நாங்கள் இங்கிருந்து உபகரணங்களைக் கொண்டு சென்று, அங்கு ஒரு பயிற்சியாளரையும் வைத்து வொர்க் அவுட் செய்தோம்.
7 மணிக்கு ஷூட்டிங் தொடங்குவதாக இருந்தால், காலை 4 மணிக்கே எழுந்து ஜிம்மில் வொர்க் அவுட் செய்வோம்.
அது முடித்துவிட்டு மீண்டும் 7 மணிக்குள் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வோம். இதை தனுஷ் பிரதர் சரியாகக் கடைப்பிடித்தார்.
ஜிம் வொர்க் அவுட் முடித்துவிட்டு வந்து டைரக்ஷன், நடிப்பு என அத்தனை வேலைகளை அவர் செய்தது என்னை சர்ப்ரைஸ் செய்தது.
அதைப் பார்க்கும்போது `நாம் இன்னும் ஓட வேண்டும்' என எனக்குத் தோன்றியது. நிறைய இடங்களுக்குச் சென்று சாப்பிட்டோம்.

அவருடைய அசிஸ்டன்ட் எனக்கு டயட் உணவு செய்து கொடுப்பார்.
தனுஷ் பிரதர் சைவ உணவுகள்தான் சாப்பிடுவார். எனக்கு மீன், வேகவைத்த நாட்டுக் கோழி என செய்து கொடுத்தார்கள்.
நாம் வேலை பார்ப்பதே சாப்பிடுவதற்குதான் என்பதைத் தெளிவாக எண்ணி சாப்பாடு நேரத்தில் அனைவருக்கும் பிரேக் கொடுத்துவிடுவார்.