செய்திகள் :

இது என்னுடையது மட்டுமல்ல, நம்முடைய பயணம்..! 10 ஆண்டுகளை நிறைவுசெய்த தெலுங்கு இயக்குநர்!

post image

பிரபல தெலுங்கு இயக்குநர் அனில் ரவிபுடி தனது பத்தாண்டுகள் நிறைவையொட்டி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

எஃப் 2, எஃப் 3, பகவந்த் கேசரி என்ற கமர்ஷியல் வெற்றிப் படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அனில் ரவிபுடி.

சமீபத்தில் வெளியான இவரது சங்கராந்தி வஸ்துனாம் திரைப்படம் ரூ.230 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.

நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்குவதாக தகவல்கள் வெளியானது. பின்னர் அவருடைய கதையை வைத்துதான் ’தளபதி 69’ படம் உருவாகி வருவதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் இயக்குநராக 10 ஆண்டுகள் நிறைவடைந்ததுக்கு அனில் ரவிபுடி கூறியதாவது:

பத்தாண்டுகளுக்கு முன்பு, பட்டாஸ் படம் இதே நாளில் வெளியானது. இது எனது வாழ்க்கையை இயக்குநராக தொடங்கியது மட்டும் கிடையாது, நான் இப்போது என்னவாக இருக்கிறேனோ எல்லாவற்றுக்குமான அடித்தளம் அதுவே.

திரும்பிப் பார்த்தால், அனைத்துமே ஒரு பாடமாகவும் அனைத்து மைல்கல்களும் ஆசிர்வாதங்களாகவும் இருக்கின்றன. நலம் விரும்பிகள், ரசிகர்கள் அளித்த அதிகப்படியான அன்புதான் என்னை புதிய சவால்களை நோக்கி நகர்த்துகிறது.

எனது சினிமா பயணத்தில் ஒரு பகுதியாக இருந்த தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், படக் குழுவினர், ரசிகர்கள் நீங்கள் அனைவரும் எனது குடும்பத்தினர். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் இவ்வளவு வெற்றிக்கும் காரணம்.

திரைத்துறையில் 10 ஆண்டுகள் முடித்துள்ள நான் மீண்டும் உங்களை எனது திரைப்படத்தின் மூலம் மகிழ்விப்பேன், தொடர்பில் இருக்கவும் வைப்பேன் என சத்தியம் செய்கிறேன். இது என்னுடைய பயணம் மட்டுமல்ல, நம்முடைய பயணம்.

மறக்க முடியாத பத்தாண்டுகளாக மாற்றியதற்கு அனைவருக்கும் நன்றி. உங்களைப் போன்றவர்கள் கிடைக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.

இளம் வயதில் புதிய சாதனை: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சின்னர்!

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா், அமெரிக்காவின் பென் ஷெல்டனை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனா்ஆடவா் ஒற்றையா் க... மேலும் பார்க்க

நின்று, கிடந்து, இருந்து...

சோழ வளநாட்டில், "நின்று, கிடந்து, இருந்து' என மூன்று நிலைகளிலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் ஸ்ரீசெüந்தரராஜ பெருமாள். மூலவராக பெருமாள் நின்ற நிலையிலும், "அரங்கப் பெருமான்' எனக் கிடந்த நிலையிலும், ... மேலும் பார்க்க

விஜய் 69: முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள விஜய் 69 படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைச... மேலும் பார்க்க

விடாமுயற்சி தலைப்புக்கென ஒரு சக்தி இருக்கிறது: அஜித் குமார்

பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வெளியாகாவிட்டால் என்ன நம் படம் வெளியாகும் நாள்தான் பண்டிகை என நடிகர் அஜித் குமார் நம்பிக்கையோடு பேசியுள்ளார்.விடாமுயற்சி படம் நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்தன. முதலில் பொங்... மேலும் பார்க்க

பொய் சொல்லுவதை நிறுத்துங்கள்: மகிழ் திருமேனி

விடாமுயற்சி படத்தின் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மகிழ் திருமேனி வதந்திகள் குறித்து பொய் சொல்லுவதை நிறுத்துங்கள் எனப் பேசியுள்ளார்.விடாமுயற்சி படம் நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்தன. முதலில் பொங்கலுக்கு ... மேலும் பார்க்க