செய்திகள் :

``இது எளிதான முடிவல்ல; ஆனால்..." - திடீரென ஓய்வை அறிவித்த 2023 உலகக் கோப்பை வின்னர்

post image

இந்திய அணியுடனான பார்டர் கவாஸ்கர் தொடரில் வெற்றிபெற்றதன் மூலம், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற ஆஸ்திரேலிய அணி, இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மகுடம் சூட ஆயத்தமாகி வருகிறது. இதனை முன்னிட்டு, இறுதிசெய்யப்படாத 14 பேர் கொண்ட உத்தேச பட்டியலை ஆஸ்திரேலிய அணி வெளியிட்டிருந்தது.

மார்கஸ் ஸ்டாய்னிஸ்

கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான அந்த அணியில், ``அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஜாம்பா." ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கான உத்தேச அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் திடீரென ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.

ஓய்வுகுறித்து பேசிய மார்கஸ் ஸ்டாய்னிஸ்,``ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது சிறப்பான பயணம். ஆஸ்திரேலிய அணியின் ஜெர்சியில் இருந்த ஒவ்வொரு தருணத்துக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். நாட்டைப் பிரதிநிதிப்படுத்துவதை நான் என்றும் மதிக்கிறேன். எனவே, இது எளிதான முடிவல்ல.

மார்கஸ் ஸ்டாய்னிஸ்

ஆனால், ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகி, என் வாழ்வின் அடுத்தகட்டத்தின்மீது கவனம் செலுத்த இதுவே சரியான நேரம் என்று நம்புகிறேன். பாகிஸ்தானில் விளையாடும் வீரர்களை நான் உற்சாகப்படுத்துவேன்." என்று தெரிவித்திருக்கிறார். அதேசமயம், டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியில் தான் விளையாடுவேன் என்றும் ஸ்டாய்னிஸ் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஸ்டாய்னிஸின் இந்த திடீர் முடிவால், சாம்பியன்ஸ் டிராபியில் அவருடைய இடத்துக்கு சரியான ஆல்ரவுண்டரைத் தேட வேண்டிய நெருக்கடி ஆஸ்திரேலிய அணிக்கு உருவாகியிருக்கிறது.

காயத்தால் கம்மின்ஸ், ஹேசில்வுட் விலகல்... சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸிக்குப் பெரும் பின்னடைவு!

இந்தியாவுக்கெதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் பாதியில் காயமடைந்த ஜோஷ் ஹேசில்வுட்டும், தொடரின் முடிவில் காயமடைந்த கேப்டன் பேட் கம்மின்ஸும் இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. எப்படியும், சாம்பி... மேலும் பார்க்க

IND vs ENG: 'பும்ரா மாதிரி என்னால விளையாட முடியாது, ஆனா...' - ஹர்திக் பாண்டியா சொல்வதென்ன?

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இன்று ஆரம்பமான (பிப்ரவரி 6) முதல் போட்டி ராஜ்கோட் நகரில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹர... மேலும் பார்க்க

INDvsENG: `கடைசி நேரத்தில் பிளெயிங் லெவனில் இடம்பெறாத Kohli; 2 பேர் அறிமுகம்' -ரோஹித்தின் காரணமென்ன?

இன்னும் இரண்டு வாரத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவிருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, இங்கிலாந்து அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. இதன் முதல் போட்டி நாக்பூரில் இன்... மேலும் பார்க்க

``Kohli -Slowly'' விராட்டை கடுப்பேற்றும் பேட் கம்மின்ஸ் - வீடியோ வைரல்!

ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ், சமீபத்தில் இந்திய வீரர் விராட்க் கோலியை ஆத்திரமூட்டும் வகையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 விளம்பரம் ஒன்றி பேசியுள்ளார். இந்த தொடர் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கவுள்ள... மேலும் பார்க்க

Rahul Dravid: சாலையில் ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் செய்த டிராவிட்; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், சாலையில் ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டிராவிட் ... மேலும் பார்க்க

Champions Trophy: "ரோஹித் பின்வாங்கமாட்டார்; விராட் செய்ய வேண்டியது..." - அஸ்வின் கணிப்பு என்ன?

ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நெருங்க நெருங்க கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் மீண்டும் ஜாம்பவான்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. கடந்த சில போட்டிகளில் இருவரும் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்ல... மேலும் பார்க்க