செய்திகள் :

இது நடந்தால் யாருமே பிளே ஆஃப்ஸுக்கு தகுதிபெற முடியாது..! அதிகரிக்கும் சுவாரசியங்கள்!

post image

ஐபிஎல் 2025 போட்டிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. போர்ப் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட போட்டிகள் நேற்று (மே.17) முதல் தொடங்கப்பட்டன.

மழையின் காரணமாக ஆர்சிபி, கேகேஆர் போட்டிகள் கைவிடப்பட்டது. இதனால், நடப்பு சாம்பியன் கேகேஆர் அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. ஆர்சிபி அடுத்த சுற்றுக்கான விளிம்பில் இருக்கிறது.

இதுவரை 58 போட்டிகள் முடிவடைந்தும் இதுவரை எந்த அணியும் பிளே ஆஃப்ஸுக்கு தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்றும் குறிப்பிட்ட 2 அணிகள் வென்றால் யாருமே பிளே ஆஃப்ஸுக்கு தகுதிபெற முடியாது என்பது கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மதியம் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் அணியும், இரவு தில்லி- குஜராத் அணிகள் மோதுகின்றன.

இந்த வாய்ப்புகள் குறித்து ஸ்டார்ஸ்போர்ட்ஸ் இந்தியா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

1. ராஜஸ்தான் பஞ்சாபை வென்றால்... ஆர்சிபி தகுதிபெறும்.

2. குஜராத் தில்லியை வென்றால்... குஜராத், ஆர்சிபி தகுதிபெறும்.

3. பஞ்சாப், குஜராத் வென்றால்... பஞ்சாப், ஆர்சிபி, குஜராத் தகுதிபெறும்.

4. பஞ்சாப், தில்லி வென்றால்... எந்த அணியும் தகுதிபெற முடியாது.

ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ்!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வ... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும்... மேலும் பார்க்க

மழையால் கைவிடப்பட்ட போட்டி; டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் ஆர்சிபி!

மழையால் கைவிடப்பட்ட போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரசிகர்களுக்கு திருப்பியளிக்கப்படும் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் ராயல் சேலஞ்... மேலும் பார்க்க

நேஹல் வதேரா, ஷஷாங் சிங் அதிரடி: ராஜஸ்தானுக்கு 220 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் 219 ரன்கள் குவித்தது.ஐபிஎல் 59-ஆவது போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் ஜெய்பூரில் மோதிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பவ... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரின் அறிமுக போட்டியிலேயே டக்கவுட்டான மிட்செல் ஓவன்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் ஓவன் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கியவர் ரன் ஏதும் எடுக்காமல் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் 59-ஆவது போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் ஜெய்பூரில்... மேலும் பார்க்க

பஞ்சாப் பேட்டிங்: மீண்டும் கேப்டனான சஞ்சு சாம்சன்!

ஐபிஎல் 59-ஆவது போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் ஜெய்பூரில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக விளையாடம் இருந்த சஞ்சு சாம்சன் மீண்டும்... மேலும் பார்க்க