செய்திகள் :

இத்தாலி பிரதமர் உடனான மீம்ஸ்... பிரதமர் மோடி சொன்னதென்ன?

post image

ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கிய 'People by WTF' தொடரில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், மற்ற நாடுகளின் உணவுகள் குறித்துப் பேசும்போது, ​``எனக்குப் பிடித்த உணவு பீட்சா. இது இத்தாலியிலிருந்து பிரபலமானது. இத்தாலியைப் பற்றி உங்களுக்கு நிறைய தெரியும் என்று மக்கள் அடிக்கடிக் கூறுவார்கள். அதைப் பற்றி ஏதாவது பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா? இத்தாலிப் பிரதமருடன் உங்கள் மீம்ஸ்களைப் பார்த்திருக்கிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார் நிகில் காமத்.

மோடி

அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ``மீம்ஸ்கள் எப்போதும் வந்துக்கொண்டேதான் இருக்கும்... மீம்ஸ்கள், சமூகவலைதள விவாதங்களில் நான் கவனம் செலுத்துவதில்லை. நான் உணவுப் பிரியர் அல்ல... ஆனாலும் நான் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்குப் பரிமாறப்படும் உணவுகளை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவேன். யாராவது எனக்கு ஒரு மெனு கொடுத்தால், என்ன சாப்பிட வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாமல் திணறுவேன். நான் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்தபோது மெனுவில் குறிப்பிடப்பட்டுள்ள உணவும் என் முன் உள்ள உணவும் ஒன்றா என்று கூட எனக்குத் தெரியாது. அதனால், அப்போதெல்லாம் மறைந்த அருண் ஜெட்லியிடம்தான் உணவை ஆர்டர் செய்யக் கூறுவேன்." எனப் பகிர்ந்துகொண்டார்.

TVK : 'பனையூரில் மாரத்தான் மீட்டிங்; குமுறிய நிர்வாகிகள்; சாந்தப்படுத்திய ஆனந்த்' - என்ன நடந்தது?

விஜய்யின் த.வெ.க கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை விடிய விடிய நடத்தி முடித்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த். அவசர அவசரமாக அழைப்பு விடுக்கப்பட்டதால் பரபரப்பாக சென்னையை அடைந்திருந்த நிர்வா... மேலும் பார்க்க

திமுக சொல்லி தான் செய்தீர்களா?; `நான் சொல்லக்கூடாது, ஆனாலும் சொல்கிறேன்’ - வேல்முருகன் எக்ஸ்க்ளூஸிவ்

`பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அரசியல் தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர், ஆளுநர் செயல்பாடு, ஆளும் கட்சி செயல்பாடு உள்ளிட்ட நமது பல்வேறு கேள்விகளுக்க... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி : அப்செட்டில் கதர்கள் - திமுக வசம் சென்ற பின்னணி!

ஈரோடு கிழக்குகடந்த 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வாக திருமகன் ஈவேரா வெற்றிபெற்றார். இவர் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்... மேலும் பார்க்க

விகடன் கருத்துக்கணிப்பு : `எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை முடக்குகிறதா திமுக?' - முடிவுகள் என்ன?

சென்னையின் பிரபல அண்ணா பல்கலைக் கழகத்தின் மாணவி ஒருவர் கடந்த மாதம் 24-ம் தேதி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரம், தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 'யார் அந்த சார்?' என்ற கே... மேலும் பார்க்க

``ரகசியம் தெரியும் என்றனர்; எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..!" - சாடும் விஜய்

ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக தேர்தல் பிரசாரத்தில் பேசிய நிலையில், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நெருங்கும் நிலையி... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு; யார் இந்த வி.சி.சந்திரகுமார்?

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த மாதம் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ஆம் தேதி இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் எ... மேலும் பார்க்க