அதிமுக பொறுப்புப் பறிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை: செங்கோட்டையன்
இத்தாலி: மனைவிகளின் நிர்வாணப் படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்த ஆண்கள் குழு; சிக்கியது எப்படி?
ஒரு ரகசிய பேஸ்புக் குழுவை அமைத்து அதில் பெண்களின் ஆபாசப் படங்களை அந்தக் குழுவில் உறுப்பினராக இருப்பவர்கள் பகிர்ந்து வந்துள்ளனர்.
2019 முதல் செயல்பட்டு வரும் இந்தக் குழு 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதில் இருக்கும் பயனர்கள் தங்களின் துணையர்கள், தோழிகள், அந்நியர்கள் எனப் பெண்களின் நிர்வாண புகைப்படங்கள், தனிப்பட்ட புகைப்படங்களை அந்தக் குழுவில் பகிர்ந்துள்ளனர்..
பெண்கள் ஆடைகள் மாற்றுவது, சன் பாத் எடுப்பது, பாலியல் செயல்களில் ஈடுபடுவது போன்ற ஆபாசப் புகைப்படங்களை அதில் பகிர்ந்து வந்துள்ளனர்.

பல புகைப்படங்கள் சம்பந்தப்பட்டவர்களின் துணைவர்களே அதனைப் பதிவேற்றி இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு புகைப்படங்களைப் பகிர்ந்து ஆபாச கருத்துக்களை அதில் பேசியிருக்கின்றன.
மெட்டா மற்றும் இத்தாலியக் காவல்துறையினருக்கு இந்தக் குழுவை மூடக்கோரி பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து காவல்துறையினர் குற்றவியல் விசாரணை தொடங்கிக் கடந்த மாதம் இந்தக் குழுவைத் துண்டித்து இருக்கின்றன.
இத்தாலியில் 2019 முதல் இந்த வகையான குற்றங்களுக்கு எதிரான சட்டமும் உள்ளது. இதன்படி அனுமதியின்றி வெளிப்படையாக பாலியல் தொடர்பான படங்களைப் பதிவேற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு ஆறு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!