97th Oscars: முதன்முறையாக ஆஸ்கர் நாமினேஷனில் திருநங்கை நடிகை - யார் இந்த கார்லா...
இந்தியாவின் ஆட்டம் நிறைவு
ஜகாா்த்தா : இந்தோனேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியா்கள் அனைவருமே, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வியாழக்கிழமை தோல்வி கண்டனா். இதையடுத்து போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஆடவா் ஒற்றையரில் லக்ஷயா சென் 16-21, 21-12, 21-23 என்ற வகையில், ஜப்பானின் கென்டா நிஷிமோடோவிடம் தோற்றாா்.
ஆடவா் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை 20-22, 21-23 என்ற கேம்களில், தாய்லாந்தின் கிடினுபோங் கெட்ரென்/தீசபோல் பவரனுகுரோ கூட்டணியிடம் போராடித் தோற்றது.
மகளிா் இரட்டையா் பிரிவில், தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா ஜோடி 21-13, 22-24, 18-21 என்ற கணக்கில், மலேசியாவின் பெய் கீ கோ/மெய் ஜிங் தியோ இணையிடம் வெற்றியை இழந்தது.
கலப்பு இரட்டையரில் துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ கூட்டணி 21-18, 15-21, 19-21 என்ற கேம்களில் மலேசியாவின் பாங் ரோன் ஹூ/சு யின் செங் ஜோடியால் வெளியேற்றப்பட்டது.