உடலுறவு குறித்து சர்ச்சை கருத்து: மக்களை சிரிக்க வைப்பதே குறிக்கோள்! யூடியூபர் வ...
இந்தியாவின் எரிசக்தி துறையில் ஏராளமான முதலீடுகளுக்கு வாய்ப்பு: பிரதமர் மோடி
இந்தியாவில் பல கண்டுபிடிப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு காரணமாக, இயற்கை எரிவாயு விநியோகம் அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் இயற்கை எரிவாயு பயன்பாடு அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் இந்தத் துறைகளில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய அரிசக்தி வாரத்தின் மூன்றாவது பதிப்பின் தொடக்க விழாவில் உரையாற்றினார்.
அப்போது, இந்தியா தனது வளர்ச்சியை மட்டுமல்லாம், உலகின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்கிறது, அதில் எரிசக்தித் துறை குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.
இந்தியாவின் எரிசக்தி லட்சியங்கள் ஐந்து தூண்களாக கட்டங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளன. வளங்களை பயன்படுத்துதல், புத்திசாலித்தனமான மனங்களிடையே புதுமைகளை ஊக்குவித்தல், பொருளாதார வலிமை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை, எரிசக்தி வர்த்தகத்தை கவர்ச்சிகரமானதாகவும், எளிதாகவும் மாற்றும் மூலோபாய புவியியல் மற்றும் உலகளாவிய நிலைத்தன்மைக்காந அர்ப்பணிப்பு ஆகிய ஆகிய ஐந்து தூண்களின் மீது இந்தியாவின் ஆற்றல் லட்சியங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறினார். இவைகள் இந்தியாவின் எரிசக்தி துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
அடுத்த இருபது ஆண்டுகள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு முக்கியமானவை என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், அடுத்த ஐந்தாண்டுகளில் பல குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டுவோம். 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன், இந்திய ரயில்வேயின் நிகர பூஜ்ஜிய கரியமில வாயு உமிழ்வை அடைதல், ஆண்டுதோறும் ஐந்து மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட இந்தியாவின் பல எரிசக்தி இலக்குகள் 2030 காலக்கெடுவுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இந்த இலக்குகள் லட்சியமாகத் தோன்றலாம், ஆனால் கடந்த பத்தாண்டின் சாதனைகள் இந்த இலக்குகள் அடையப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
லாம் ரிசர்ச் இந்தியாவில் ரூ.10,000 கோடி முதலீடு: அஷ்வினி வைஷ்ணவ் தகவல்
“கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சூரிய சக்தி உர்பத்தி 32 மடங்கு அதிகரித்து, உலகின் மூன்றாவது பெரிய சூரிய சக்தி உற்பத்தி நாடாக மாற்றியுள்ளது.
ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ள இந்தியா, புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தித் திறன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும், பாரீஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைந்த முதல் ஜி-20 நாடு இந்தியா என்று தெரிவித்தார்.
தற்போதைய 19 சதவிகித எத்தனால் கலப்பு என்பது இந்தியாவின் அந்நியச் செலாவணி சேமிப்பு, விவசாயிகளின் கணிசமான வருவாய் மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தில் குறிப்பிடத்தக்க குறைப்புக்கு வழிவகுத்துள்ளது.
2025 அக்டோபர் மாதத்திற்குள் 20 சதவிகித எத்தனால் கலப்பை அடைய வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை எடுத்துரைத்த மோடி, இந்தியாவின் உயிரி எரிபொருள் தொழில்துறை 500 மில்லியன் மெட்ரிக் டன்கள் என்ற நிலையான மூலப்பொருள்களுடன் விரைவான வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது.
மேலும் இந்தியாவின் ஜி-20 தலைமையின் போது, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி நிறுவப்பட்டது. அது தற்போது 28 நாடுகள் மற்றும் 12 சர்வதேச அமைப்புகளை உள்ளடக்கியுள்ளதாக வளர்ந்துள்ளது. இந்தக் கூட்டணி கழிவுகளை செல்வமாக மாற்றி, சிறப்பு மையங்களை அமைக்கிறது என தெரிவித்தார்.
இந்தியா தனது ஹைட்ரோகார்பன் வளங்களின் திறனை முழுமையாக ஆராய்வதற்காக தொடர்ந்து சீர்திருத்தம் செய்து வருகிறது. முக்கிய கண்டுபிடிப்புகள் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பின் விரிவாக்கம் ஆகியன எரிவாயு துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பதாகவும், இந்தியாவின் எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை அதிகரித்துள்ளது.
இந்தியா தற்போது நான்காவது பெரிய சுத்திகரிப்பு மையமாக உள்ளது என்றும், அதன் திறனை 20 சதவிகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் வண்டல் படுகைகளில் ஏராளமான ஹைட்ரோகார்பன் வளங்களை கொண்டுள்ளன, அவற்றில் சில ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன, மற்றவை ஆய்வுக்காக காத்திருக்கின்றன என்றவர், இந்தியாவின் இந்த முக்கியத் துறையை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, அரசு வெளிப்படையான நில உரிமக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
சிறப்பு பொருளாதார மண்டலத்தைத் திறப்பது மற்றும் ஒற்றைச் சாளர அனுமதி முறையை நிறுவுவது உள்பட அரசு விரிவான ஆதரவை வழங்கியுள்ளது.
எண்ணெய் வயல்களின் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் தற்போது பங்குதாரர்களுக்கு கொள்கை ஸ்திரத்தன்மை, நீட்டிக்கப்பட்ட குத்தகைகள் மற்றும் மேம்பட்ட நிதி விதிமுறைகளை வழங்குகின்றன.
இந்த சீர்திருத்தங்கள் கடல்சார் துறையில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை ஆராய்வதற்கும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும், மூலோபாய பெட்ரோலிய இருப்புக்களை பராமரிப்பதற்கும் உதவும் என்று அவர் கூறினார்.
இந்தியாவில் பல கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவடைந்து வரும் குழாய் உள்கட்டமைப்பு காரணமாக, இயற்கை எரிவாயு விநியோகம் அதிகரித்து வருவதாகவும், இது எதிர்காலத்தில் இயற்கை எரிவாயு பயன்பாடு அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் இந்தத் துறைகளில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.