செய்திகள் :

"இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணிக்குச் செல்லும் மாநிலம் தமிழகம்"- தங்கம் தென்னரசு

post image

விருதுநகர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு 181 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 1,537 பயனாளிகளுக்கு ரூ.11.68 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

பின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 40 ஆண்டுகளுக்கு முன் தர்மபுரியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தொடங்கிய விதை இன்று தமிழகம் முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களாக வேரூன்றி நிற்கிறது என்று குறிப்பிட்டார். தமிழக அரசு மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால் பெண்களின் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டத்தில் `உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் 60,000 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 75 சதவிகித மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இங்கு பெறப்படும் மனுக்களில் 50 சதவிகிதம் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பிக்கிறார்கள். தகுதியுள்ள எல்லோரும் பயன்பெற வேண்டும் என்பதால் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை நவம்பர் மாதம் பரிசீலித்து, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத்தொகையை முதலமைச்சர் வழங்குவார்.

மகளிர் சுய உதவிக்குழுக்களால் அவர்கள் பொருளாதாரம் உயர்வதோடு, சமூக மாற்றமும் ஏற்படுகிறது. இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணியாற்றும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. அதேபோல், சமூக முன்னேற்றத்தில் மிக உயர்ந்த நிலையில் தமிழகம் இருப்பதற்கும் பெண்கள்தான் காரணம் என அவர் குறிப்பிட்டார்.

மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி

இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மகளிர் கலந்துகொண்டனர். அரசு விழா என்பதால் ஆட்சியர், அமைச்சர், எம்.எல்.ஏ., அரசு அலுவலர்கள் மட்டுமே விழா மேடையில் இருப்பார்கள்.

ஆனால் இந்த விழாவில் அரசு அலுவலர்களைத் தவிர்த்து திமுக கட்சியினர் அனைவரும் மேடையையும், விழா நடந்த இடத்தையும் முழுவதுமாக ஆக்கிரமித்தனர்.

இதனால் அங்கு இருந்த மகளிர் மேடையில் ஏறி கடன் தொகையை பெறுவதற்கும், மண்டபத்திற்குள் செல்லுவதற்கும் சிரமமாக இருக்கிறது என முணுமுணுத்தனர். அமைச்சரும் அரசு விழா என்பதை மறந்து கட்சி நிர்வாகிகளை வரவேற்றது அங்கிருந்த மகளிரிடையே பேசுபொருளாக இருந்தது.

மயிலாடுதுறை: வாய்க்காலில் கலக்கும் கழிவுநீர்; தீர்வின்றி அல்லாடும் கிராம மக்கள்!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே ஆறுபாதியில் உள்ள சத்தியவாணன் வாய்க்கால், சுற்றியுள்ள 21க்கும் மேற்பட்ட கிராமங்களுங்கும் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கும் முக்கிய நீர் பாசனமா... மேலும் பார்க்க

பள்ளிக்கரணை: `சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி; எத்தனை கோடி கைமாறியது?' - அரசை சாடும் சீமான்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழித்து 2,000 கோடி ரூபாய் அளவில் ஊழல் ஏற்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அ... மேலும் பார்க்க

ஜார்கண்ட்: `குழந்தைகளுக்கு HIV ரத்தம்?' - மருத்துவமனையின் அலட்சியத்தால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாய்பாசா நகரில் ஒரு அரசு மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தலசீமியா என்பது இரத்த சிவ... மேலும் பார்க்க

'SIR' எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (Bihar SIR)' மேற்கொள்ளப்பட்டிருந்தது பெரும் பரபர... மேலும் பார்க்க

கொடைக்கானல்: ‘அஞ்சு வீடு’ அருவி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

கொடைக்கானல் பேத்துபாறை பகுதியில் `அஞ்சு வீடு' அருவி இருக்கிறது. அதிகம் இந்த அருவி பற்றி வெளியே தெரியாத நிலையில் அருவி பற்றி வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களின் வழியாக இளைஞர்கள் தெரிந்துகொண்டு அதிகளவில் இங... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: மூத்த ஐபிஎஸ் மீது காவல்துறை அதிகாரியின் மனைவி பாலியல் புகார்!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது காவல்துறை அதிகாரியின் மனைவி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் துன்புறுத்தியதாக புகார் அளித்திருக்கிறார்.2003-ம் ஆண்டு ஐபிஎஸ் அ... மேலும் பார்க்க