செய்திகள் :

'இந்தியாவில் குறைந்தது; பாகிஸ்தானில் உயர்வு' - வெளியான ஏழ்மை புள்ளிவிவரங்கள்; இந்தியா, பாக் ஒப்பீடு!

post image

கடந்த சனிக்கிழமை (ஜூன் 5), உலக வங்கி இந்தியாவின் பொருளாதார நிலை குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளன.

இந்தத் தரவுகள் 2011-12 நிதியாண்டோடு 2022-23 நிதியாண்டை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தரவுகளில் பணவீக்கத்திற்கு ஏற்ப, மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருப்பவர்களின் வருமானத்தை ஒரு நாளைக்கு 2.15 டாலரில் இருந்து 3 டாலர்களாக உயர்த்தியுள்ளது உலக வங்கி.

இந்தத் தரவுகளின் படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஓர் ஒப்பீட்டை பார்க்கலாம்...

2011-12 நிதியாண்டில், மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருந்த 27.1 சதவிகிதத்தினர் 2022-23 நிதியாண்டில் 5.3 சதவிகிதமாக குறைந்துள்ளனர்.

உலக வங்கி
உலக வங்கி

2011-12 நிதியாண்டில், 344.47 மில்லியன் பேர் இந்தியாவில் மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருந்தனர். 2022-23 நிதியாண்டில், 75.24 மில்லியன் பேர் என மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதாவது, இடைப்பட்ட காலக்கட்டத்தில், கிட்டத்தட்ட 269 மில்லியன் பேர் இந்தியாவில் மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.

பாகிஸ்தானை பொறுத்தவரை, 2017 மற்றும் 2021 ஆண்டுகளின் இடையே, அவர்களின் மிகுந்த ஏழ்மைக் கோடு சதவிகிதம் 4.9 சதவிகிதத்தில் இருந்து 16.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்த ஏழ்மை சதவிகிதம் பாகிஸ்தானில் 39.8 சதவிகிதத்தில் இருந்து 44.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தத் தரவுகளில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 4.2 டாலர் வருமானம் என்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஏன் இந்த ஏற்ற, இறக்கங்கள்?

மேலே குறிப்பிட்டுள்ள 11 ஆண்டு காலக்கட்டத்தில், இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக, இந்தக் காலக்கட்டத்தில், வளரும் பொருளாதாரமாகவும், தற்சார்புடையதாகவும் உயர்ந்துள்ளது.

ஆனால், பாகிஸ்தான் 2017 முதல் 2021 வரை ஐந்து ஆண்டுகளில்...

சர்வதேச நாணய நிதியத்திடம் 25 நிலுவைகளில் 44.57 பில்லியன் டாலர்கள் கடன்கள்;

உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, இஸ்லாமிய வளர்ச்சி வங்கியில் கிட்டத்தட்ட 38.8 பில்லியன் டாலர் கடன்கள்;

சீனாவிடம் இருந்து 25 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட கடன்கள்;

பாண்டுகள் மூலம் 7.8 பில்லியன் டாலர்கள் கடன்கள்;

சவுதி அரேபியா, பாரீஸ் கிளப் போன்றவற்றில் இருந்து பல பில்லியன் கடன்கள் வாங்கியுள்ளது.

இந்தியாவிற்கும் பல கடன்கள் உள்ளது தான். ஆனால், பாகிஸ்தானை ஒப்பிடுகையில் குறைவு தான்.

முருக பக்தர்கள் மாநாடு: 10,000 வாகனங்களில் 2.5 லட்சம் பேர்? மேடையில் முருகன் சிலைகள் - நேரடி விசிட்

மதுரை பாண்டி கோவில் அருகிலுள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டுக்காக அறுபடை முருகன் கோவில்களைப் போன்ற செட் ஒன்று... மேலும் பார்க்க

கீழடி: "ஆதாரம் இல்லாத அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்காது" - ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் நடந்த தனியார் நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "திமுக ஆட்சியின் சக்கரம் சுழல்கிறதோ இல்லையோ, அரசு பேருந்தின்... மேலும் பார்க்க

"இந்தியாவில் அமெரிக்கப் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய வேண்டாம்" - அமெரிக்கா எச்சரிக்கை; பின்னணி என்ன?

இந்தியாவில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.ஜூன் 16ம் தேதி வெளியான இந்த ஆலோசனை அறிக்கையில், இந்தியாவின் சில பகுதிகளில் குற்றங... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாடு: ``முருகனும் சிவனும் இந்துவா?" - சீமான் கேள்வி

இந்து முன்னணி அமைப்பின் சார்பாக இன்று மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தவிருக்கிறது.உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் வருவதாகக் கூறப்படுகிறது.ம... மேலும் பார்க்க

US attacks on Iran: பாராட்டும் இஸ்ரேல்; கண்டிக்கும் ஜனநாயக அமைப்புகள் என்ன சொல்கின்றன?

ஈரானின் அணு ஆயுதத் தளங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.அதே நேரம் இஸ்ரேல... மேலும் பார்க்க

"முருக பக்தர்கள் மாநாடு முடிந்த பின் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி" - எல்.முருகன்

முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலிலும் சரி, ஆன்மீகத்திலும் சரி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்ட... மேலும் பார்க்க