செய்திகள் :

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கிறிஸ் ஓக்ஸ் சேர்ப்பு!

post image

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கிறிஸ் ஓக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் வரும் ஜூன்.20ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.

வேகப் பந்து வீச்சாளரான கிறிஸ் ஓக்ஸ் (36) 57 டெஸ்ட் போட்டிகளில் 181 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். பௌலிங் ஆல்ரவுண்டரான இவர் 1,970 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக 2018 தொடரில் இங்கிலாந்து வெற்றியடைய முக்கியமான காரணமாக கிறிஸ் ஓக்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது

லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற அந்தப் போட்டியில் கிறிஸ் ஓக்ஸ் 137 ரன்கள், 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதன்மூலம் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

முதல் டெஸ்ட் - ஜூன் 20- 24. (ஹெடிங்கிலி)

2ஆம் டெஸ்ட் - ஜூலை 2- 6. (எட்ஜ்பாஸ்டன்)

3ஆம் டெஸ்ட் - ஜூலை 10- 14. (லார்ட்ஸ்)

4ஆம் டெஸ்ட் - ஜூலை 23- 26. (ஓல்ட் டிராபோர்ட்)

5ஆம் டெஸ்ட் - ஜூலை 31- ஆக.4. (தி ஓவல்)

இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஆலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.

சாய் சுதர்சன் ஒரு சூப்பர்ஸ்டார்..! முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

தமிழக வீரர் சாய் சுதர்சனை முன்னாள் ஆஸி. கேப்டன் புகழ்ந்து பேசியுள்ளார். அதில் சுதர்சனை சூப்பர்ஸ்டார் எனக் கூறியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் (23 வயது) குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொ... மேலும் பார்க்க

2 ஏசிஎல் தசைகள் கிழிந்தும் 100 டெஸ்ட்டில் விளையாடிய புஜாரா..! ரோஹித் புகழாரம்!

இந்திய வீரர் புஜாராவுக்கு 2 ஏசிஎல் தசைகளும் கிழிந்தும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார். குஜராத்தில் பிறந்த புஜாரா (37) 103 டெஸ்ட்டுகளில் விளையாடி 7,195 ரன்கள் குவித்துள்ள... மேலும் பார்க்க

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவார்: மைக்கேல் கிளார்க்

ஆஸி. முன்னாள் கேப்டன் கிளார்க், “ டெஸ்ட் கிரிக்கெட்டை உயர்வாக நினைக்கும் விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவார்” எனக் கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.பிஜிடி தொடரில... மேலும் பார்க்க

2ஆவது டெஸ்ட்: இந்தியா ஏ அணிக்கு எதிராக இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சு!

இந்தியா ஏ அணிக்கு எதிராக இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இந்தியாவின் ஏ அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந... மேலும் பார்க்க

பியூஷ் சாவ்லா ஓய்வு அறிவிப்பு!

சுழல்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார்.36 வயதாகும் பியூஷ் சாவ்லா இந்தியாவிற்காக 3 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டிகள், 7 டி20 போட்டி... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பெயர் மாற்றம்..!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் போட்டிகள் பார்டர் - கவாஸ்கர் டிராபி என அழைக்கப்படுகின்றன. அதேபோல... மேலும் பார்க்க