‘Vijay - BJP கூட்டணி’ இதை சொல்வதில் எனக்கு வெட்கமில்லை - Tamilisai Soundararajan...
இந்தியா இனி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குமா? - `அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை' வெளியுறவுத் துறை பதில்
'இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காது. மோடி என்னிடம் கூறினார்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் பேசியிருந்தார்.
இந்தியாவின் வர்த்தகம் குறித்து இந்திய அரசு எதுவும் தெரிவிக்காமல் அமெரிக்க அதிபர் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்திய அரசின் பதில் என்ன?
ட்ரம்ப்பின் கூற்றுக்கும், எழும் விமர்சனங்களுக்கும் தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதில் அளித்துள்ளார்.
அவர், "இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் முக்கியமான இறக்குமதியாளர்.

நிலையற்ற ஆற்றல் சூழலில், இந்திய நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதே எங்களுடைய நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இதைப் பொறுத்து தான் எங்களுடைய இறக்குமதி கொள்கை இருக்கின்றன.
நிலையான எரிசக்தி விலையையும், பாதுகாப்பான விநியோகத்தையும் உறுதிப்படுத்துவது எங்களுடைய ஆற்றல் கொள்கையின் இரட்டை இலக்குகள். சந்தை நிலைமையைப் பொறுத்து, எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துவதும், பல்வகைப்படுத்துவதும் இதில் அடங்கும்.
அமெரிக்கா
அமெரிக்காவைப் பொறுத்தவரை, நாங்கள் பல ஆண்டுகளாக எரிசக்தி கொள்முதல்களை விரிவுப்படுத்த முயன்று வருகிறோம். இது சில ஆண்டுகளாக சீராக முன்னேறி வருகிறது.
இப்போதைய அரசாங்கம் இந்தியா உடனான எரிசக்தி ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன" என்று கூறியுள்ளார்.