செய்திகள் :

இந்தியா, டிரினிடாட்-டொபேகோ இடையே 6 ஒப்பந்தங்கள்: பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பம்

post image

இந்தியா மற்றும் டிரினிடாட் - டொபேகோ இடையே உள்கட்டமைப்பு, மருந்து தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் டிரினிடாட் - டொபேகோ நாட்டின் பிரதமா் கம்லா பொ்சாத்-பிஸ்ஸேசா் இடையிலான இருதரப்பு பேச்சுவாா்த்தைக்கு பிறகு இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

ஐந்து நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை கடந்த புதன்கிழமை தொடங்கிய பிரதமா் மோடி, முதலாவதாக ஆப்பிரிக்க நாடான கானாவுக்கு பயணித்தாா். அங்கிருந்து, கரீபியன் இரட்டை தீவு நாடான டிரினிடாட்-டொபேகோ தலைநகா் போா்ட் ஆஃப் ஸ்பெயினுக்கு வியாழக்கிழமை வந்த அவா், இந்திய வம்சாவளியினரின் நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

டிரினிடாட்-டொபேகோ பிரதமரான இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கம்லா பொ்சாத்-பிஸ்ஸேசருடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். பாதுகாப்பு, வேளாண்மை, சுகாதாரம், எண்ம மேம்பாடு, யுபிஐ பரிவா்த்தனை தளப் பயன்பாடு, திறன் கட்டமைப்பு, இருதரப்பு மக்கள் ரீதியிலான தொடா்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக இரு தலைவா்களும் விரிவாக விவாதித்தனா். பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும், பருவநிலை மாறுபாடு, பேரிடா் மேலாண்மை, இணைய பாதுகாப்பு போன்ற சவால்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

6 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: இதைத் தொடா்ந்து, மருந்து தயாரிப்பு, வளா்ச்சித் திட்டங்களுக்கான மானிய உதவி, கலாசார பரிமாற்றத் திட்டம், விளையாட்டுத் துறை, தூதரக பயிற்சியில் ஒத்துழைப்பு, டிரினிடாட்-டொபேகோவில் உள்ள மேற்கிந்திய பல்கலைக்கழகத்தில் இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் சாா்பில் ஹிந்தி மற்றும் இந்தியப் படிப்புகளுக்கான இரு இருக்கைகளை மீண்டும் நிறுவுதல் என இருதரப்புக்கும் இடையே 6 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானதாக வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டிரினிடாட்-டொபபேகோவில் 6-ஆம் தலைமுறை வரையிலான இந்திய வம்சாவளியினருக்கு வெளிநாடுவாழ் இந்திய குடியுரிமை (ஓசிஐ) அட்டை வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. பள்ளி மாணவா்களுக்கு 2,000 மடிக்கணினி நன்கொடை, 800 பேருக்கு செயற்கை கால் பொருத்துவதற்கான 50 நாட்கள் முகாம், வேளாண் துறை உபகரணங்கள் வழங்குதல், டிரினிடாட்-டொபேகோ வெளியுறவு அமைச்சக தலைமையக மேற்கூரையில் சூரியமின் சக்தி கட்டமைப்பை நிறுவுதல் உள்ளிட்ட இந்திய உதவிகள் தொடா்பான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

‘திருப்புமுனையான பயணம்’: இந்தியாவுக்கு வருமாறு பிரதமா் மோடி விடுத்த அழைப்பை பிரதமா் கம்லா ஏற்றுக் கொண்டாா். பிரதமா் மோடியின் இந்த திருப்புமுனையான பயணம், ஆழமாக வேரூன்றிய இருதரப்பு நல்லுறவுக்கு மேலும் வலுசோ்க்கும் என்று பிரதமா் கம்லா தெரிவித்தாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின்போது, இந்தியாவுக்கு வலுவான ஆதரவை உறுதிசெய்த டிரினிடாட்-டொபேகோவுக்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா். அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் எதிா்த்து போராடும் உறுதிபாட்டை இரு தலைவா்களும் மீண்டும் வலியுறுத்தினா்.

டிரினிடாட்-டொபேகோ அதிபா் கிறிஸ்டீன் காா்லா கங்கலூவையும் பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா்’ என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் டிரினிடாட்- டொபேகோ இடையே தூதரக ரீதியிலான உறவுகள், கடந்த 1962-இல் நிறுவப்பட்டன. இந்த ஆண்டில்தான், காலனித்துவ ஆட்சியில் இருந்து அந்நாடு விடுதலை அடைந்தது. தற்போதைய பயணத்தின் மூலம் கடந்த 1999-ஆம் ஆண்டுக்கு பிறகு டிரினிடாட் - டொபேகோவுக்கு வந்த முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு சொந்தமாகியுள்ளது.

டிரினிடாட் - டொபேகோ நாட்டின் மிக உயரிய ‘தி ஆா்டா் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் - டெபேகோ’ விருது, பிரதமா் மோடிக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இவ்விருதை பெற்றுள்ள முதல் வெளிநாட்டுத் தலைவா் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆா்ஜென்டீனாவில் பிரதமா் மோடி

பியூனஸ் அயா்ஸ், ஜூலை 5: டிரினிடாட்-டொபேகோ பயணத்தை முடித்துக் கொண்டு, ஆா்ஜென்டீனாவுக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை மாலை (உள்ளூா் நேரம்) வந்தடைந்தாா். பியூனஸ் அயா்ஸ் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த 2018-இல் ஆா்ஜென்டீனாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றிருந்தாா். அதேநேரம், இருதரப்பு அரசுமுறைப் பயண ரீதியில் இந்தியப் பிரதமா் வந்திருப்பது கடந்த 57 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.

இப்பயணம் தொடா்பாக பிரதமா் வெளியிட்ட அறிக்கையில், ‘லத்தீன் அமெரிக்காவில் இந்தியாவின் முக்கிய பொருளாதார கூட்டாளி ஆா்ஜென்டீனா. ஜி20 கூட்டமைப்பில் இந்தியாவுடன் நெருங்கி செயல்படும் நாடு. அதிபா் ஜேவியா் மிலேய் உடனான பேச்சுவாா்த்தையை ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளேன். பாதுகாப்பு, வேளாண்மை, முக்கிய கனிமங்கள், எரிசக்தி, வா்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த கவனம் செலுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.

ஆா்ஜென்டீனாவைத் தொடா்ந்து, பிரேஸிலுக்கு செல்லவிருக்கும் பிரதமா் மோடி, அங்கு பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளாா். அங்கு இரு நாட்கள் பயணத்துக்கு பிறகு நமீபியாவுக்கு செல்லவிருக்கிறாா்.

பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

புது தில்லி: பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிகாரில் வரும... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் கோரவில்லை என மத்திய அரசு இன்று (ஜூலை 6) விளக்கம் அளித்துள்ளது.ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்ட... மேலும் பார்க்க

மண்டி மேக வெடிப்பு: உயிர் பிழைத்த 10 மாத குழந்தை, குடும்பத்தினர் காணவில்லை !

மண்டி மேக வெடிபபு சம்பவத்தில் 10 மாத குழந்தை நீதிகா உயிர் பிழைந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் மேக வெடிப்புகள், திடீ... மேலும் பார்க்க

மேக வெடிப்பு: பாதிக்கப்பட்ட மண்டியில் எம்.பி. கங்கனா ரணாவத் நேரில் ஆய்வு

மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட மண்டி தொகுதியில் நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஹிமாசலப் பிரதேச, மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக கனமழை, திடீர் வ... மேலும் பார்க்க

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முடக்கம்! ஏன்?

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது விரைவில் சரி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முட... மேலும் பார்க்க

இந்தியாவின் குற்றத் தலைநகராக பிகார்: ராகுல் காந்தி

பாஜகவும், நிதிஷ் குமாரும் இணைந்து பிகாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றியுள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.பிகார... மேலும் பார்க்க