செய்திகள் :

"இந்தியா மீதான வரிவிதிப்பால் ரஷ்ய பொருளாதாரம் கலக்கம்" - ரஷ்யா குறித்து ட்ரம்ப்!

post image

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி, ரஷ்யாவின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் பேசியிருக்கிறார்.

வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர், உலகளாவிய அழுத்தங்களும் மற்றும் இந்தியா உள்ளிட்ட ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள கட்டணங்களும் மாஸ்கோவின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வருவதாகப் பேசியிருக்கிறார்.

"ரஷ்யா மீண்டும் அவர்களது நாட்டை கட்டியெழுப்பும் நிலைக்கு செல்ல வேண்டுமென நினைக்கிறேன். அது மிகப் பெரிய நாடு... அவர்களது பொருளாதாரம் இப்போது சிறப்பாக இல்லை. மிகவும் கலக்கமடைந்துள்ளது" என்றார்.

மேலும், "அமெரிக்க ஜனாதிபதி அவர்களிடம் அதிகம் எண்ணெய் வாங்கும் அல்லது இரண்டாவது அதிகம் எண்ணெய் வாங்கும் நாட்டிடம் (இந்தியாக் குறிப்பிட்டார்), ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் உங்கள் மீது வரி போடுவோம் எனக் கூறும்போது அது மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும்" என்றுள்ளார்.

தொடர்ந்து, "வேறுயாரும் இவ்வளவு கடுமையாக நடந்துகொண்டதில்லை, நான் அந்த எல்லையில் நிற்கவில்லை" என்றும் அறிவித்தார்.

அமெரிக்கா இந்தியாவின் மீது ஆகஸ்ட் 1ம் தேதி 25% வரிவிதித்தது. தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு தண்டமாக கூடுதல் 25% வரியை அறிவித்தது. இதனால் அமெரிக்காவால் அதிகபட்சம் வரி விதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

"இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியிருக்கிறோம்"

"வரிவிதிப்புகள் அமெரிக்காவுக்கு பணம் தருவதுடன் எதிரிகளின் மீது நம் ஆதிக்கம் செலுத்தும் சக்தியையும் தருகின்றன. நாம் இந்தியா - பாகிஸ்தான் உட்பட 5 போர்களை நிறுத்தியிருக்கிறோம்.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

அஜர்பைஜான் - அர்மேனியா நாடுகள் 37 ஆண்டுகளாக பொங்கி எழுந்தன. அது முடிவுக்கு வந்தபோது, இரு தலைவர்களும் 'நாங்கள் இது முடிவுக்கு வரும் என ஒருபோதும் நினைக்கவில்லை' எனக் கூறினர். ரஷ்யா அதை நிறுத்த முயன்றது, அவர்கள் எல்லோரும் அதை நிறுத்த முயன்றார்கள், அது மிகவும் கடினமான சூழல், ஆனால் நாம்தான் முடித்து வைத்தோம்." எனப் பேசியுள்ளார்.

ரஷ்யா ஒரு போரிடும் நாடு!

ரஷ்யாவும் அமெரிக்காவும் எப்போது சாதாரணமான வர்த்தக நடவடிக்கைகளுக்குத் திரும்பும் எனக் கேட்கப்பட்டபோது, "மாஸ்கோ ஒரு மதிப்புமிக்க நிலம். போரின் பாதையில் இருந்து விலகி அவர்கள் வியாபாரத்தின் பாதையில் செல்ல வேண்டும், அது ஒரு போர் புரியும் நாடு. அதைத்தான் அவர்கள் செய்வார்கள். அவர்கள் நிறைய போர்களில் சண்டையிட்டிருக்கிறார்கள். என் நண்பர் சொன்னார் 'ரஷ்யா கடினமான நாடாக இருக்க காரணம் அவர்கள் எப்போதுமே ஏதாவது ஒரு போரில் இருப்பார்கள்' என்று. அவர்கள் ஹிட்லரை தோற்கடித்தவர்கள். அதனால்தான் நாமும் வென்றோம்." என்றார்.

புதின் சந்திப்பு குறித்து பேசுகையில், சந்திப்புத் தொடங்கிய இரண்டாவது நிமிடமே ஒப்பந்தம் செய்யப்படுமா இல்லையா எனத் தெரிந்துவிடும் என்றார்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முதல் கியூப ஒருமைப்பாட்டு விழா வரை - 12.08.2025 முக்கியச் செய்திகள்!

12.08.2025 முக்கியச் செய்திகள்தெருநாய்கள் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, "தெருக்களிலிருந்து நாய்களை அகற்றுவது கொடூரமானது, குறுகிய பார்வையுடையது, இரக்கமற்றது." எ... மேலும் பார்க்க

ECI : ஒரே தொகுதியில் 6 வாக்குகள்; First Time Voter -க்கு 124 வயது? | DMK STALIN BJP |Imperfect Show

* பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்! - இந்தியா* பாகிஸ்தானை ஆதரிக்கும் அமெரிக்கா!* காங்கிரஸ் கட்சி கண்டனம்!* அமளிக்கு நடுவே மசோதாக்கள் தொடர்ந்து நிறைவேற்றம்?* பழைய ஓய்வுதியம் திட்டத்தை மீ... மேலும் பார்க்க

கியூப ஒருமைப்பாட்டு விழா: "அடிமைத்தனத்தைப் பற்றி எடப்பாடி பேசலாமா?" - ஸ்டாலின் சாடல்!

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கியூபா ஒருமைப்பாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். சோசலிச கியூபாவைக் காப்போம், ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம், பிடல்காஸ்ட்ரோவின் நூற்றாண... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலைப் படையை தீவிரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா!

பாகிஸ்தானில் செயல்படும் பலுசிஸ்தான் விடுதலைப் படை (Balochistan Liberation Army (BLA)) என்ற அமைப்பை தீவிரவாத அமைப்பாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது அமெரிக்கா. மஜீத் படைப்பிரிவு என்ற அமைப்பும் இதில் அடங... மேலும் பார்க்க