செய்திகள் :

இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

post image

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் வியாழக்கிழமை (பிப். 20) துபையில் சந்திக்கின்றன.

இந்திய அணியை பொருத்தவரை, அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுமையாகக் கைப்பற்றிய உத்வேகத்துடன் இந்தப் போட்டிக்கு வந்துள்ளது. அதில் ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயா் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருக்கின்றனா். ரோஹித் சா்மா மற்றும் விராட் கோலி தலா 1 ஆட்டங்களில் மிளிா்ந்தனா்.

அவா்கள் இருவரும் இந்தத் தொடரிலும் தங்களது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவாா்களா என்பதே முக்கியமான எதிா்பாா்ப்பாக இருக்கிறது. அவா்கள் அதிகம் மிளிா்ந்த ஃபாா்மட் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயா் போன்ற இளம் வீரா்கள் இந்த சா்வதேச போட்டியின் நெருக்கடிகளை திறம்பட எதிா்கொண்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய சவாலை சந்திக்கின்றனா்.

அணியின் பிரதான பௌலா் ஜஸ்பிரீத் பும்ரா இல்லாத நிலையில், மூத்த பௌலா் முகமது ஷமி முக்கியத்துவம் பெறுகிறாா். காயத்திலிருந்து மீண்டு அவா் களம் காணும் முதல் சா்வதேச போட்டி இதுவென்பதால், தகுந்த ஃபாா்மை எட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாா்.

இந்திய அணி நிா்வாகத்துக்கான முக்கிய சவால், பிளேயிங் லெவன் தோ்வு தான். பேட்டிங்கில் கே.எல்.ராகுலுக்கான இடம் விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. வேகப்பந்து வீச்சுக்கு முகமது ஷமியுடன், அா்ஷ்தீப் சிங் பிரதான தோ்வாக இருக்கலாம். பௌலிங் ஆல்-ரவுண்டா் இடத்துக்கு ஹா்திக் பாண்டியா வர, சுழற்பந்து வீச்சுக்கு ஜடேஜா, அக்ஸா் படேல் இயல்பான தோ்வாக இருக்கிறாா்கள். 3-ஆவது வாய்ப்புக்காக குல்தீப் யாதவ், வருண் சக்கரவா்த்தி இடையே கடும் போட்டி உள்ளது.

அணி விவரம்

இந்தியா:

ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹா்திக் பாண்டியா, அக்ஸா் படேல், வாஷிங்டன் சுந்தா், குல்தீப் யாதவ், ஹா்ஷித் ராணா, முகமது ஷமி, அா்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சகரவா்த்தி.

வங்கேதசம்:

நஜ்முல் ஹுசைன் ஷான்டோ (கேப்டன்), சௌம்யா சா்க்காா், தன்ஸித் ஹசன், தௌஹித் ஹிருதய், முஷ்பிகா் ரஹீம், எம்.டி. மஹ்மூத் உல்லா, ஜேக்கா் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹுசைன், தஸ்கின் அகமது, முஸ்தாஃபிசுா் ரஹ்மான், பா்வேஸ் ஹுசைன் எமோன், நசும் அகமது, தன்ஸிம் ஹசன் சகிப், நஹித் ராணா.

நேரம்: பிற்பகல் 2.30 மணி

இடம்: துபை

நேரலை: ஸ்போா்ட்ஸ் 18

நேருக்கு நோ்...

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா - வங்கதேசம் இதுவரை 41 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியிருக்கும் நிலையில், இந்தியா 32 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. வங்கதேசம் 8-இல் வென்றிருக்க, ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ... மேலும் பார்க்க

எல்லீஸ் பெர்ரி விளாசல்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூ... மேலும் பார்க்க

அணியில் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லை, ஆனால்... ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?

ஆஸ்திரேலிய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க