செய்திகள் :

இந்திய சினிமாவின் வரலாற்றை மாற்றியமைத்த எம்புரான்!

post image

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. வெளியாகும் முன்பே எம்புரான் புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் முதல் மலையாளப் படமென்பதால் ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்துள்ளது.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. மோகன்லால் படத்திலேயே மிக அதிக பட்ஜெட் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

முன்பதிவு தொடங்கிய நேற்று (மார்ச்.21) தொடங்கிய நிலையில் திரிசூரில் அவரது ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்ற விடியோ இணையத்தில் பேசுபொருளாகியது.

இந்நிலையில் 24 மணிநேரத்தில் அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த முதல் இந்தியத் திரைப்படமாக எம்புரான் சாதனை படைத்துள்ளது.

ஏற்கனவே, முதல் ஒரு மணி நேரத்தில் அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

ராபின்ஹூட் டிரைலர்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் நிதின் நாயகனாகவும் ஸ்ரீ லீலா நாயகியாகவும் நடித்துள்ள ராபின்ஹூட் படத்தை வெங்கி குடுமுலா இயக்கியுள்ளார்.இந்தப் படத்தில் ‘அதிதா சர்பிரைஸ்’ எனும் பாடலுக்கு கேதிகா ... மேலும் பார்க்க

அனுபமாவின் பரதா படத்தின் முதல் பாடல்!

நடிகை அனுபமா நடித்துள்ள பரதா படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி படத்தில் அறிமுகமான அனுபமா தெலுங்கில் பல படங்களில் நடித்து வரு... மேலும் பார்க்க

கிரிக்கெட்டர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் இலங்கை படப்பிடிப்பில் முன்னாள் கிரிக்கெட் வீரரைச் சந்தித்தார்.இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங... மேலும் பார்க்க

கடலோர மக்களுக்காக ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் விடியோ

கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.கடலோர மக்களுக்காக அவர் வெளியிட்டுள்ள விடியோவில், அனைவருக்கும் வணக்கம், நம்ம நாட்டின்... மேலும் பார்க்க