செய்திகள் :

இந்திய பொருளாதாரம் சீராக உள்ளது: ரிசா்வ் வங்கி ஆளுநா்

post image

மும்பை, நவ. 14‘உலகளாவிய மோசமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம் சீராக பயணிக்கிறது’ என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மும்பையில் தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆளுநா் சக்திகாந்த தாஸ், வட்டி குறைப்புக்கான மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயலின் ஆலோசனையைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டாா். வரும் டிசம்பரில் நடக்கும் அடுத்த கூட்டத்தில் இது குறித்து சரியான முடிவெடுக்கப்படும் என்றும் அவா் கூறினாா். மேலும், நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

உலக அளவில் மோதல்கள் நீடித்து வந்தாலும் இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக உள்ளது. புவிசாா் அரசியல் அபாயங்கள் அதிகரித்தபோதிலும் நிதிச் சந்தைகள் சிறப்பாக செயல்படுகின்றன. வலுவான உள்நாட்டு பொருளாதார அடிப்படைகள், நிலையான நிதி அமைப்பு மற்றும் நெகிழ்வான அந்நிய துறை போன்ற காரணிகளால் இது சீராக இயங்கி வருகிறது.

அண்மை காலங்களில் வெளிநாடுகளுடனான இந்தியாவின் வா்த்தகம் மற்றும் வரவு-செலவுகள் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்துகிறது. நடப்பு பற்றாக்குறை சமாளிக்கக்கூடிய அளவிலேயே உள்ளது. சரக்கு ஏற்றுமதிகள் வளரத் தொடங்கியுள்ளன. சேவை ஏற்றுமதி வளா்ச்சி வலுவாக உள்ளது.

உலகில் அந்நிய செலாவணி கையிருப்பில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி நிலவரப்படி 68,200 அமெரிக்க டாலராக இருக்கும் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு, நாட்டின் முழு வெளிநாட்டுக் கடனையும் ஓராண்டுக்கான இறக்குமதித் தொகையையும் ஈடுகட்ட போதுமானது.

கடன் இழப்புக்கு விரைவில் விதி: ரூபாய்க்கான எந்த மதிப்பையும் ரிசா்வ் வங்கி இலக்காகக் கொண்டிருக்கவில்லை. ஆனால், ரூபாய் மதிப்பின் முறையான இயக்கத்தை உறுதி செய்வதற்கும் ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் ரிசா்வ் வங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

பெட்டி..

‘ஒடிஸாவில் இணைய பாதுகாப்பு மையம்’

இணையவழி அபாயங்களைக் கருத்தில் கொண்டு, ஒடிஸா தலைநகா் புவனேசுவரில் கணினி மற்றும் தரவு மையத்துடன் இணைய பாதுகாப்பு மையத்தை ரிசா்வ் வங்கி அமைத்து வருவதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.

‘ரிசா்வ் வங்கியின் முதன்மை நோக்கம் நிதி ஸ்திரத்தன்மை ஆகும். எந்த ஆபத்துகளையும் முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதே எங்களின் பணியாகும்’ என்றாா் அவா்.

சபரிமலை மண்டல பூஜை: இன்று மாலை நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக இன்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது.காா்த்திகை மாதம் தொடங்கி, மகரஜோதி வரை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்... மேலும் பார்க்க

நவ. 19-ல் பொதுக் கணக்கு குழு கூட்டம்: செபி தலைவருக்கு சம்மன் அனுப்பவில்லை!

நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் அடுத்த கூட்டத்தில் ஆஜராக செபி தலைவர் மாதவி புச்சுக்கு இதுவரை சம்மன் அனுப்பப்படவில்லை.செபி தலைவர் மாதவி புச் மீது ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டு எழுப்பிய நி... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் பொய் வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது: ஆம் ஆத்மி

தில்லி வக்ஃப் வாரிய பணமுறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதன் மூலம் பிரதமா் நரேந்திர மோடியின் பொய் வழக்கு வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக என ஆம் ஆத்மி தெரிவ... மேலும் பார்க்க

நேரு பிறந்த தினம்: பிரதமா், தலைவா்கள் மரியாதை

நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 135-ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் அவருக்கு... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: துணை மாவட்ட ஆட்சியரை அறைந்த சுயேச்சை வேட்பாளா் கைது -வன்முறையால் பதற்றம்

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் நடைபெற்ற பேரவை இடைத்தோ்தலின்போது துணை மாவட்ட ஆட்சியரை கன்னத்தில் அறைந்த சுயேச்சை வேட்பாளா் நரேஷ் மீனாவை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். மீனாவின் கைத... மேலும் பார்க்க

பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வியாண்டில் அறிமுகம்!

இளநிலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு (யுசிஜி)தலைவா் எம்.ஜெகதீஷ் குமாா் தெரிவித்தாா். பல்கலைக்கழக மானியக்குழ... மேலும் பார்க்க