இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.85.20-ஆக முடிவு!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வரலாற்றில் இல்லாத அளவிற்கு 9 காசு குறைந்து ரூ.85.20 என்ற புதிய நிலையில் நிலைபெற்றது.
தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாயின் மதிப்பை மேலும் வீழ்ச்சியடையச் செய்தது.
இதையும் படிக்க: அதிக ஏற்ற இறக்கங்களுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.85.10 ஆக தொடங்கி, இன்ட்ரா டே வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இதுவரை இல்லாத குறைந்தபட்ச மட்டமான விலையான ரூ.85.21 ஐ தொட்டது. இறுதியாக ரூ.85.20 என்ற புதிய குறைந்த விலையில் முடித்தது. இது அதன் முந்தைய முடிவிலிருந்து 9 காசுகள் குறைவு.
நேற்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் குறைந்து ரூ.85.11-ஆக இருந்தது.