செய்திகள் :

இந்திய ரூபாய் மதிப்பு 2 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி!

post image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாத வகையில், ஒரே நாளில் மிகக் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

இன்று வணிகம் நிறைவடைந்தபோது, ஒரே நாளில் 57 காசுகள் சரிந்து 86.61 என்ற அளவில் இருந்தது.

அமெரிக்காவின் வலுவான பொருளாதார புள்ளி விவரங்களும், 10 ஆண்டுகால வைப்பு நிதிகளின் ஈவுத்தொகை 5 சதவீதத்தை நெருங்கி வருவதும், அமெரிக்கப் பத்திர விற்பனையை அதிகரித்து வருவதன் எதிரொலியாக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (ஜன. 13) ஒரே நாளில் 57 காசுகள் சரிந்து ரூ.86. 61 காசுகளுக்கு வணிகமானது.

கடைசி வணிக நாளான கடந்த வெள்ளிக்கிழமை ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிந்து, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.86 ஆக முடிந்திருந்தது. இந்த வீழ்ச்சி நிலையே வாரத் தொடக்கமான இன்றைய வணிக நேரத் தொடக்கத்திலும் காணப்பட்டது. படிப்படியாக வீழ்ச்சியடைந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பங்குச் சந்தையில் உள்ளூர் முதலீட்டாளர்களிடையே நிலவிய எதிர்மறையான நிலை மற்றும் அந்நிய நிதி முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவை ரூபாய் மதிப்பு சரிந்ததற்கான காரணங்களாகவும் சொல்லப்பட்டன. இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இசையமைப்பாளர் தமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது!

சபரிமலையில் மகரவிளக்கு தினத்தில் மலையாள இசையமைப்பாளர் கைப்பிரதம் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.ஹரிவராசனம்விருதுகேரள அரசும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து நிறுவிய விருதாகு... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப் பதிவு!

தில்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மாதிரி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பொதுப்பணித் துறை அதிகாரி மீது தில்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜனவரி 7 ஆம் தேதி அ... மேலும் பார்க்க

ராகுல் காங்கிரஸை பாதுகாக்க முயற்சிக்கிறாா்: நான் நாட்டை காப்பாற்ற போராடுகிறேன்: கேஜரிவால்

புது தில்லி: ‘நான் நாட்டை காப்பாற்ற முயற்சிக்கும் நிலையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி காங்கிரஸை பாதுகாக்க முயற்சித்து வருகிறாா்’ என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வ... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்து ரூ.86.62 என்ற நிலையை எட்டியது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ர... மேலும் பார்க்க

மகா கும்பமேளா தொடங்கியது: முதல் நாளில் ஒன்றரை கோடி போ் புனித நீராடல்

பிரயாக்ராஜ்: உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 4... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு அளித்த உத்தரவாதங்கள் நிச்சயம் நிறைவேறும்! மாநில அந்தஸ்து விவகாரத்தில் பிரதமா் சூசகம்!

ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு அளித்த உத்தரவாதங்களை நிச்சயம் நிறைவேற்றுவேன்; சரியான நேரத்தில் சரியானவை நடக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா். சோன்மாா்க் சுரங்கப் பாதை திறப்பு நிகழ்... மேலும் பார்க்க