செய்திகள் :

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை நீட்டிப்பு

post image

இந்திய விமானங்கள் தங்களின் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனா்.

இதையடுத்து, பாகிஸ்தானியா்களுக்கான விசா ரத்து, சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் என இந்தியா அதிரடி முடிவுகளை எடுத்தது. இதன் எதிரொலியாக, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்பரப்பை மூடியது. எனவே, மேற்கு நாடுகளுக்குச் செல்லும் இந்திய விமானங்கள், அரபிக்கடல், வளைகுடா நாடுகள் வழியாக கூடுதல் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) விதிகளின்படி, ஒரே நேரத்தில் மாற்று நாட்டு விமானங்களுக்கான வான்வெளி தடையை ஒரு மாதத்துக்கு மேல் ஒரு நாடு விதிக்க முடியாது.

அதன்படி, இந்தியா விமானங்களுக்கான பாகிஸ்தானின் தடை உத்தரவு வரும் வெள்ளிக்கிழமையுடன் காலாவதியாகிறது. இந்நிலையில், இந்தத் தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு வியாழக்கிழமைக்குள் வெளியாகலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த 1999-ஆம் ஆண்டு காா்கில் மோதல், 2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலின்போதும் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்பரப்பை மூடியது குறிப்பிடத்தக்கது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு இப்படியொரு வரவேற்பா?

ஹாவேரி: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 7 பேர் பிணையில் விடுதலையான நிலையில், கார், இசை என பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு பிரதமரின் பதில்தான் ஆபரேஷன் சிந்தூர்: அமித் ஷா பாராட்டு

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆ... மேலும் பார்க்க

மழையால் நின்ற இந்து திருமணம்.. முஸ்லிம் திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற ஆச்சரியம்!

புணேவின் வான்வொரி பகுதியில், திறந்தவெளியில் நடைபெறவிருந்த இந்து திருமணச் சடங்குகள் கனமழையால் நின்றுபோன நிலையில், முஸ்லிம் குடும்பத்தினர், தங்களது திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தில் இடம்கொடுத்து உதவ... மேலும் பார்க்க

அம்மா.. நான் சிப்ஸ் பேக்கெட் திருடவில்லை.. 13 வயது சிறுவனின் தற்கொலை கடிதம்

பன்ஸ்குரா: மேற்கு வங்க மாநிலம் பன்ஸ்குரா பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர், அம்மா நான் சிப்ஸ் பேக்கெட்டை திருடவில்லை என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பெங்களூருவில் 9 மாதக் குழந்தைக்கு கரோனா!

கர்நாடகத்தின் பெங்களூருவில் 9 மாதக் குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.உலகையை அச்சுறுத்தும் கரோன வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ... மேலும் பார்க்க

துருக்கியுடன் வர்த்தக உறவை துண்டித்தால்.. விலை உயரும் பொருள்களின் பட்டியல்!

கடைசி வாய்ப்பாக, பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு சொல்லுங்கள் என்று மத்திய அரசு துருக்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளை செய்து வரும் துருக்கியுடன் வணிக ரீதியான உறவைத்... மேலும் பார்க்க