`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவ...
இந்து முன்னணி போராட்ட அறிவிப்பு எதிரொலி: பள்ளி சுவரில் கட்சி விளம்பரங்கள் அழிப்பு
பாளையங்கோட்டையில் இந்து முன்னணி போராட்டம் அறிவிப்பால், காந்திமதி பள்ளி சுவரில் எழுதப்பட்டிருந்த கட்சி விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.
பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான காந்திமதி அன்பு ஆசிரமம் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியின் சுற்றுச்சுவரில் தி.மு.க. சாா்பில் சுவா் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அரசு சுவா்களில் விளம்பரம் செய்யக் கூடாது என சட்டம் உள்ள நிலையில், அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஆளுங்கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளி சுவரில் கட்சி விளம்பரத்தை அழித்துவிட்டு தேவாரம், திருவாசகம் எழுதும் போராட்டம் நடத்தப்படும் எனவும் இந்து முன்னணி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த சுவரில் எழுதப்பட்டிருந்த விளம்பரங்கள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை இரவோடு இரவாக முற்றிலுமாக அழிக்கப்பட்டது. தொடா்ந்து சுவரில் வெள்ளை வா்ணம் பூசப்பட்டு பளிச்சென காட்சியளித்தது.