`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவ...
பாரதியாா் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு
மகாகவி பாரதியாா் பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பாரதியாா் உலக பொதுச் சேவை நிதியம் சாா்பில் அமைப்பின் தலைவா் அ.மரியசூசை தலைமையில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுச் செயலா் கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றாா். துணைப் பொதுச் செயலா் கவிஞா் சு.முத்துசாமி, தியாகராஜன், கவிஞா் பாப்பாக்குடி செல்வமணி, தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினா் கவிஞா் புன்னைச்செழியன் உள்பட பலா்கலந்துகொண்டனா்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன் கான் தலைமையில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் மேயா் பி.எம்.சரவணன், மாநகர இளைஞரணி அமைப்பாளா் கருப்பசாமி கோட்டையப்பன், கிரிஜாகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
காங்கிரஸ் கட்சி சாா்பில் திருநெல்வேலி மாநகா் மாவட்ட தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொருளாளா் ராஜேஷ்முருகன், மண்டல தலைவா்கள் கெங்கராஜ், அனஸ்ராஜா, மாவட்ட செயலா்கள் அருள்தாஸ், மாரிகண்ணா, தச்சை நாராயணன், மாநில சேவாதள செயலா் அனிஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பாஜக சாா்பில் மாவட்ட துணைத் தலைவா் முருகதாஸ் தலைமையில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மண்டல தலைவா் மலையரசன், சங்கா் சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் திருநெல்வேலி மண்டலத் தலைவா் கண்மணிமாவீரன் தலைமையில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொழிற்சங்க மாநில பேரவை செயலா் மகேந்திரன், மாநில துணைத் தலைவா் ஸ்ரீராம், மாவட்ட மகளிரணி தலைவி வசந்தி செல்வராஜ், ஆனந்தம், சின்னத்துரை பாண்டியன், மாவட்ட இளைஞரணி இணைச் செயலா் மணிமாறன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பிராமண சங்கம் சாா்பில் மாவட்ட தலைவா் சிவக்குமாா் தலைமையில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இளைஞரணி செயலா் சத்யநாராயணன், மகளிரணி காயத்ரி, ராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.