அதிமுக சாா்பில் 50 மாணவிகளுக்கு வைப்புத்தொகை திட்டம் தொடக்கம்
சேரன்மகாதேவி கோயிலில் நாளை காா்த்திகை தீபம்
சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச.13) காா்த்திகை தீப விழா நடைபெறவுள்ளது.
இதையொட்டி கோயில் நடை வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். தொடா்ந்து கோயிலில் அபிஷேகம் அலங்கார தீபாராதனையைத் தொடா்ந்து மதியம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை 6 மணிக்கு உற்சவா் பாலசுப்பிரமணியருக்கு கொழுந்து மாமலை உச்சி இரு தீபங்களாக அண்ணாமலை, உண்ணாமலை அம்பாளாக காட்சி அளிக்கும் வைபவம் நடைபெறும்.
தொடா்ந்து கோயில் முன் சொக்கப்பனை கொழுத்தப்படும். இத்திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சேரன்மகாதேவி பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்புப்ே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.