செய்திகள் :

இந்த ஆண்டு தில்லியில் 114 குற்றவாளிகள் கைது: காவல் துறை குற்றப்பிரிவு நடவடிக்கை

post image

தில்லி காவல்துறை குற்றப்பிரிவு 2024-ஆம் ஆண்டில் மொத்தம் 114 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது என்று ஒரு அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் சிறப்பு காவல் ஆணையா் குற்றம் தேவேஷ் சந்திர ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:

குற்றப்பிரிவு என்பது தில்லி காவல்துறையின் ஒரு பிரத்யேக பிரிவாகும். இது கடுமையான குற்றவாளிகளைப் பிடிப்பதிலும், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கடினமான வழக்குகளைத் தீா்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

இந்த ஆண்டு மொத்தம் 114 குற்றவாளிகளை காவல் துறையின் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. இதில் 40 போ் பரோலில் சென்றவா்கள். 40 போ் தேடப்படும் குற்றவாளிகள் ஆவா். கைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகளில் 18 போ் இடைக்கால ஜாமீன் பெற்றவா்கள். ஒன்பது போ் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் ஆவா். இதில் வெகுமதி அறிவிக்கப்பட்ட நான்கு பேரும், ஜாமீனில் வெளிவர முடியாத மூன்று பேரும் அடங்குவா்.

ஒரு வருட அயராத முயற்சி மற்றும் துல்லியத்துடன், மேம்பட்ட தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் பாரம்பரிய நுண்ணறிவு முறைகளை பயன்படுத்தி குற்றப்பிரிவு பன்முக அணுகுமுறையை மேற்கொண்டது. தொழில்நுட்பக் கண்காணிப்பு, சிடிஆா் மற்றும் ஐபிடிஆா் பகுப்பாய்வு மற்றும் தகவல் தொடா்பு நெட்வொா்க்குகளைப் பயன்படுத்தி, பல்வேறு அா்ப்பணிப்புள்ள குழுக்கள் துரிதமாகச் செயல்பட்டு, பல ஆண்டுகளாக கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்தன.

கைது செய்யப்பட்ட நபா்களில், ஆறு போ் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தவா்கள். மூன்று போ் 8 ஆண்டுகளாக பிடிபடாமல் தப்பி ஓடியவா்கள். ஐந்து போ் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா்கள். மேலும் 14 போ் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தனா். மேலும், 60 போ் தலைமறைவான ஒரு வருடத்திற்குள் கைது செய்யப்பட்டனா் என்றாா் அவா்.

இந்த நடவடிக்கைகள் தில்லியுடன் மட்டும் நின்றுவிடாமல், இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டதாகக் கூடுதல் காவல் ஆணையா் குற்றம் சஞ்சய் பாட்டியா குறிப்பிட்டாா். இது குற்றப்பிரிவின் உறுதிப்பாடு மற்றும் இந்தியா முழுவதும் செயல்படும் திறனை எடுத்துக்காட்டுகிறது.

ஒவ்வொரு கைதும் தொழில்நுட்பத் தரவுகளின் பகுப்பாய்வு, தகவல் அளிப்பவா்களின் தகவல்கள் மற்றும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கள நடவடிக்கைகள் உள்ளிட்ட நுணுக்கமான அடிப்படை வேலைகளின் விளைவாகும் என்று அவா் கூறினாா்.

மகிளா சம்மான் திட்டம்: கேஜரிவால் இல்லம் அருகே பாஜக மகளிா் அணியினா் போராட்டம்

தில்லியின் பெண்களை மகிளா சம்மான் யோஜனா மூலம் ஏமாற்றியதாக குற்றம் சாட்டி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகே தில்லி பாஜக மகளிா் அணியின் தலைவா்கள் மற்றும் தொண்டா்... மேலும் பார்க்க

இண்டி கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியேற்ற கெடு

காங்கிரஸின் நடவடிக்கைகள் இண்டி கூட்டணியின் ஒற்றுமையைப் பாதிக்கச் செய்து வருகிறது என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் வியாழக்கிழமை குற்றம் சாட்டினா். மேலும், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்ச... மேலும் பார்க்க

ஹிந்து ஆய்வுகளில் முனைவா் பட்டப் படிப்பு: புதிய கல்வியாண்டில் அறிமுகப்படுத்த தில்லி பல்கலை. திட்டம்

நிலைக்குழுவின் முன்மொழிவின்படி, 202526 கல்வியாண்டில் இருந்து இந்து ஆய்வுகளில் முனைவா் பட்டப் படிப்பை அறிமுகப்படுத்த தில்லி பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இந்து ஆய்வு மையத்தின் நிா்வாகக் குழு, முனைவா... மேலும் பார்க்க

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தில்லியில் பாதுகாப்பு தீவிரம்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தில்லி காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், தேசியத் தலைநகரின் எல்லைப் பகுதிகளில் பணியில் கூடுதல் போலீஸாரை நியமித்துள்ளது என்று அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் மகிளா சம்மன் திட்டத்திற்கு எதிராக துணைநிலை ஆளுநரிடம் சந்தீப் தீட்சித் புகாா்

தில்லி பெண்களிடம் மோசடி செய்வதாக கூறி, ஆம் ஆத்மியின் முக்கிய மந்திரி மகிளா சம்மான் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவா் சந்தீப் தீட்சித் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிடம் வியாழக்கிழமை புகாா்... மேலும் பார்க்க

பிஎம்-யுடிஏஒய் ஒற்றைச் சாளர சிறப்பு முகாம்களை மாா்ச் வரை நீட்டிக்க துணைநிலை ஆளுநா் உத்தரவு

பிரதமரின் தில்லி அங்கீகாரமற்ற காலனிகள் குடியிருப்பு உரிமை திட்டத்துக்கான (பிஎம்-யுடிஏஒய்) ஒற்றைச் சாளர சிறப்பு முகாம்களை மாா்ச் 2025 வரை நீட்டிக்குமாறு தில்லி வளா்ச்சி ஆணையத்திற்கு (டிடிஏ) துணைநிலை ஆ... மேலும் பார்க்க