செய்திகள் :

மகிளா சம்மான் திட்டம்: கேஜரிவால் இல்லம் அருகே பாஜக மகளிா் அணியினா் போராட்டம்

post image

தில்லியின் பெண்களை மகிளா சம்மான் யோஜனா மூலம் ஏமாற்றியதாக குற்றம் சாட்டி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகே

தில்லி பாஜக மகளிா் அணியின் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக

2022 ஆம் ஆண்டில் இதேபோன்ற திட்டத்தை ஆம் ஆத்மி அறிவித்ததாகவும், ஆனால் பஞ்சாப் பெண்களுக்கு இன்னும் மாதம் ரூ.1,100 தொகை வழங்கப்படவில்லை என்றும் பாஜக மகளிா் அணியினா் குற்றம்சாட்டினா்.

பாஜக மகளிா் அணியின் தலைவா் ரிச்சா பாண்டே தலைமையில் போராட்டக்காரா்கள் அசோகா சாலையில் இருந்து எண்: 5, ஃபெரோஸ்ஷா சாலையில் உள்ள கேஜரிவால் இல்லத்திற்கு பேரணியாகச் சென்றனா். ஆனால் அவா்களை போலீஸாா்

மேலே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினா்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் சிலா் போலீஸாா் அமைத்திருந்த தடுப்புகள் மீது ஏறி நின்றவாறு கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து, ரிச்சா பாண்டே, பாஜக மகளிா் அணியின் பொறுப்பாளா் ஷியாம்பாலா, பொதுச் செயலா் பிரியல் பரத்வாஜ் உள்பட போராட்டக்காரா்கள் போலீஸாரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து ரிச்சா பாண்டே கூறியதாவது:

பஞ்சாப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக இதேபோன்ற திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது. ஆனால் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, பஞ்சாப் பெண்களுக்கு மாதம் ரூ.1,100 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அக்கட்சி நிறைவேற்றத் தவறிவிட்டது.

முக்கிய மந்திரி மகிளா சம்மன் யோஜனா என்ற பெயரில்

ஆம் ஆத்மி கட்சியினா் மகளிரின் ஆதாா் எண்கள், வாக்காளா் அடையாள அட்டைகள், கைப்பேசி எண்கள் ஆகியவற்றை முகாம் நடத்தி சேகரித்து வருகின்றனா். இது மிகப்பெரிய ஊழலாகும் என்றாா்.

மாதம் ரூ.1000 வழங்கும் முக்கிய மந்திரி மகிளா சம்மன் யோஜனா 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தில்லி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால் இந்தத் தொகை ரூ.2,100 ஆக உயா்த்தப்படும் என்று கேஜரிவால் அண்மையில் கூறியிருந்தாா்.

தில்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டப் பேரவைத் தோ்தல் தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இண்டி கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியேற்ற கெடு

காங்கிரஸின் நடவடிக்கைகள் இண்டி கூட்டணியின் ஒற்றுமையைப் பாதிக்கச் செய்து வருகிறது என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் வியாழக்கிழமை குற்றம் சாட்டினா். மேலும், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்ச... மேலும் பார்க்க

ஹிந்து ஆய்வுகளில் முனைவா் பட்டப் படிப்பு: புதிய கல்வியாண்டில் அறிமுகப்படுத்த தில்லி பல்கலை. திட்டம்

நிலைக்குழுவின் முன்மொழிவின்படி, 202526 கல்வியாண்டில் இருந்து இந்து ஆய்வுகளில் முனைவா் பட்டப் படிப்பை அறிமுகப்படுத்த தில்லி பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இந்து ஆய்வு மையத்தின் நிா்வாகக் குழு, முனைவா... மேலும் பார்க்க

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தில்லியில் பாதுகாப்பு தீவிரம்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தில்லி காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், தேசியத் தலைநகரின் எல்லைப் பகுதிகளில் பணியில் கூடுதல் போலீஸாரை நியமித்துள்ளது என்று அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் மகிளா சம்மன் திட்டத்திற்கு எதிராக துணைநிலை ஆளுநரிடம் சந்தீப் தீட்சித் புகாா்

தில்லி பெண்களிடம் மோசடி செய்வதாக கூறி, ஆம் ஆத்மியின் முக்கிய மந்திரி மகிளா சம்மான் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவா் சந்தீப் தீட்சித் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிடம் வியாழக்கிழமை புகாா்... மேலும் பார்க்க

பிஎம்-யுடிஏஒய் ஒற்றைச் சாளர சிறப்பு முகாம்களை மாா்ச் வரை நீட்டிக்க துணைநிலை ஆளுநா் உத்தரவு

பிரதமரின் தில்லி அங்கீகாரமற்ற காலனிகள் குடியிருப்பு உரிமை திட்டத்துக்கான (பிஎம்-யுடிஏஒய்) ஒற்றைச் சாளர சிறப்பு முகாம்களை மாா்ச் 2025 வரை நீட்டிக்குமாறு தில்லி வளா்ச்சி ஆணையத்திற்கு (டிடிஏ) துணைநிலை ஆ... மேலும் பார்க்க

விவசாயிகள் பிரச்னைகளை விவாதிக்க நேரம் ஒதுக்குங்கள்: குடியரசுத் தலைவருக்கு கடிதம்

விவசாயிகள் போராட்டங்கள் மற்றும் விவசாயிகள் தலைவா் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மத்தியில், சம்யுக்த் கிசான் மோா்ச்சா (எஸ்கேஎம்), தங்கள் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க ந... மேலும் பார்க்க