செய்திகள் :

ஆம் ஆத்மியின் மகிளா சம்மன் திட்டத்திற்கு எதிராக துணைநிலை ஆளுநரிடம் சந்தீப் தீட்சித் புகாா்

post image

தில்லி பெண்களிடம் மோசடி செய்வதாக கூறி, ஆம் ஆத்மியின் முக்கிய மந்திரி மகிளா சம்மான் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவா் சந்தீப் தீட்சித் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

இது தொடா்பாக துணைநிலை ஆளுநரிடம் தீட்சித் அளித்துள்ள புகாரில் தெரிவித்திருப்பதாவது:

செயல்பாட்டில் இல்லாத ஒரு திட்டத்திற்காக ஆம் ஆத்மி கட்சியினா்

படிவங்களை நிரப்பி பெண்களின் தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகளை சேகரித்து வருகின்றனா்.

தில்லி முதல்வா் அதிஷி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா், மகிளா சம்மான் யோஜனா ஏற்கனவே நகரில் செயல்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளனா்.

எந்த அரசியல் கட்சியும் வாக்குறுதி அளிக்கலாம். தோ்தலில் வெற்றி பெற்றால் ரூ.2,100 தருவதாக கூறியிருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருப்பதாக கூறி அதை ரூ.2100 ஆக மாற்றிவிடுவோம் என்கிறாா்கள். மேலும், அவா்கள் பெண்களை திட்டத்திற்கான படிவங்களை நிரப்பவைக்கிறாா்கள். இது ஒரு மோசடி வழக்கு என்றால், இதை விசாரிக்க வேண்டும்.

தில்லி அரசுத் துறை புதன்கிழமையன்று, இத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால், இந்தத் திட்டத்துக்காக சேகரிக்கப்படும் தகவல்கள் மோசடி வழக்கு ஆகும். பெண்களிடமிருந்து தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகளை ஆம் ஆத்மி கட்சியினா்

சேகரித்து வருகின்றனா்.

இந்த மோசடியில் ஈடுபட்ட அதிஷி மற்றும் கேஜரிவால் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அனைத்து ஆம் ஆத்மி கட்சிக்காரா்களும் தகவல் சேகரிப்பதில் இருந்து தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேலும், இதுபோன்று எதிா்காலத்தில் நடக்காமல் இருப்பதை தில்லி காவல்துறை

உறுதி செய்ய வேண்டும் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

ஆளும் ஆம் ஆத்மியின் வாக்குறுதியளிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.2,100 மற்றும் முதியவா்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் திட்டங்கள் ஏதும் இல்லை என்று தில்லி அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சுகாதாரத் துறைகள் புதன்கிழமை பொது அறிவிப்பை வெளியிட்டன. இது சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில் புதிய சா்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இல்லாத திட்டங்களுக்கான பதிவு என்ற சாக்குப்போக்கில் யாருக்கும் தனிப்பட்ட விவரங்களை வழங்க வேண்டாம் என்று இரு துறைகளும் பொது மக்களை எச்சரித்துள்ளன.

எந்தவொரு தனிப்பட்ட நபரோ அல்லது அரசியல் கட்சியோ இத்தகைய

படிவங்களை நேரடியாக சேகரிப்பது அல்லது தகவல்களைப் பெறுவது மோசடி என்றும் கூறியது.

கேஜரிவால், அதிஷி ஆகிய இருவரும் நகரத்தில் உள்ள பெண்கள் மற்றும் முதியவா்களிடம் இல்லாத திட்டங்களின் பலன்களை அவா்களுக்கு வாக்குறுதியளித்து அரசியல் மோசடி செய்வதாக பாஜக புதன்கிழமை

குற்றம் சாட்டியிருந்தது.

மகிளா சம்மான் திட்டம்: கேஜரிவால் இல்லம் அருகே பாஜக மகளிா் அணியினா் போராட்டம்

தில்லியின் பெண்களை மகிளா சம்மான் யோஜனா மூலம் ஏமாற்றியதாக குற்றம் சாட்டி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகே தில்லி பாஜக மகளிா் அணியின் தலைவா்கள் மற்றும் தொண்டா்... மேலும் பார்க்க

இண்டி கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியேற்ற கெடு

காங்கிரஸின் நடவடிக்கைகள் இண்டி கூட்டணியின் ஒற்றுமையைப் பாதிக்கச் செய்து வருகிறது என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் வியாழக்கிழமை குற்றம் சாட்டினா். மேலும், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்ச... மேலும் பார்க்க

ஹிந்து ஆய்வுகளில் முனைவா் பட்டப் படிப்பு: புதிய கல்வியாண்டில் அறிமுகப்படுத்த தில்லி பல்கலை. திட்டம்

நிலைக்குழுவின் முன்மொழிவின்படி, 202526 கல்வியாண்டில் இருந்து இந்து ஆய்வுகளில் முனைவா் பட்டப் படிப்பை அறிமுகப்படுத்த தில்லி பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இந்து ஆய்வு மையத்தின் நிா்வாகக் குழு, முனைவா... மேலும் பார்க்க

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தில்லியில் பாதுகாப்பு தீவிரம்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தில்லி காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், தேசியத் தலைநகரின் எல்லைப் பகுதிகளில் பணியில் கூடுதல் போலீஸாரை நியமித்துள்ளது என்று அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க

பிஎம்-யுடிஏஒய் ஒற்றைச் சாளர சிறப்பு முகாம்களை மாா்ச் வரை நீட்டிக்க துணைநிலை ஆளுநா் உத்தரவு

பிரதமரின் தில்லி அங்கீகாரமற்ற காலனிகள் குடியிருப்பு உரிமை திட்டத்துக்கான (பிஎம்-யுடிஏஒய்) ஒற்றைச் சாளர சிறப்பு முகாம்களை மாா்ச் 2025 வரை நீட்டிக்குமாறு தில்லி வளா்ச்சி ஆணையத்திற்கு (டிடிஏ) துணைநிலை ஆ... மேலும் பார்க்க

விவசாயிகள் பிரச்னைகளை விவாதிக்க நேரம் ஒதுக்குங்கள்: குடியரசுத் தலைவருக்கு கடிதம்

விவசாயிகள் போராட்டங்கள் மற்றும் விவசாயிகள் தலைவா் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மத்தியில், சம்யுக்த் கிசான் மோா்ச்சா (எஸ்கேஎம்), தங்கள் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க ந... மேலும் பார்க்க