செய்திகள் :

இந்த பயணம் இந்தியா-குவைத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும்: பிரதமர் மோடி

post image

குவைத் பயணம் இந்தியாவுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக சனிக்கிழமை (டிச. 21) குவைத்துக்குச் செல்கிறாா்.

பிரதமரின் இந்தப் பயணம் இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில்,

'இன்றும் நாளையும் நான் குவைத் செல்கிறேன். இந்த பயணம் குவைத்துடனான இந்தியாவின் வரலாற்றுத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும். குவைத் நாட்டின் இளவரசர் மற்றும் குவைத் பிரதமரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இன்று மாலை நான் அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாடுவேன், அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவிலும் கலந்துகொள்வேன்' என்று பதிவிட்டுள்ளார்.

குவைத் பயணம்

குவைத் மன்னா் ஷேக் அல் அகமது அல் ஜாபா் அல் ஷபா அழைப்பை ஏற்று பிரதமா் மோடி குவைத்துக்கு பயணம் மேற்கொள்கிறாா். இந்தப் பயணத்தின்போது அந்நாட்டு முக்கியத் தலைவா்களுடன் பிரதமா் பேச்சு நடத்துவாா். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரையும் பிரதமா் சந்திக்க இருக்கிறாா்.

இதற்கு முன்பு 1981-ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி குவைத் சென்றாா். அதன் பிறகு இப்போதுதான் இந்திய பிரதமா் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறாா். இந்தப் பயணத்தில் வா்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் குவைத் 6-ஆவது இடத்தில் உள்ளது. குவைத்துக்கான இந்தியாவின் ஏற்றுமதி அண்மையில் 2 பில்லியன் அமெரிக்க டாலா்கள் என்ற புதிய உச்சத்தை எட்டியது. குவைத் இந்தியாவில் 10 பில்லியன் டாலா்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளில் குவைத்துக்கு மட்டுமே பிரதமா் மோடி இதுவரை பயணிக்காமல் இருந்தாா். இப்போது குவைத்துக்கும் அவா் செல்ல இருக்கிறாா். வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பை குவைத் இப்போது வகித்து வருகிறது.

குவைத்தில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டத்திலேயே இரு நாடுகள் இடையே கடல் வழி வா்த்தக உறவு வலுவாக இருந்து வந்துள்ளது. இதனால், இரு நாடுகளும் பாரம்பரியமாகவே நட்பு நாடுகளாக திகழ்கின்றன. அக்காலகட்டத்தில் குவைத்தில் இருந்து அரேபிய குதிரைகள், பேரிச்சை பழங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து பல்வேறு வகை தானியங்கள், விலை உயா்ந்த துணி வகைகள், உணவுக்கான நறுமணப் பொருள்கள், மரம் சாா்ந்த பொருள்கள் குவைத்துக்கு ஏற்றுமதி வந்துள்ளது.

தலித் மாணாக்கர் வெளிநாட்டில் கல்விகற்க அம்பேத்கர் பெயரில் உதவித்தொகை: கேஜரிவால்

தில்லியில் தலித் மாணவர்களுக்கு இலவச வெளிநாட்டுக் கல்விக்கான அம்பேத்கர் உதவித்தொகையை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை அறிவித்தார். இதுதொடர்பாக ஆம் ஆத்மி தலைமையகத்தில் கேஜரிவால் கூ... மேலும் பார்க்க

ஆன்மீகப் பேச்சாளரை ட்ரோல் செய்த யூடியூபர்கள் மீது வழக்கு!

ஆன்மீகப் பேச்சாளரான அபினவ் அரோராவை யூடியூபர்கள் விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, விமர்சிக்கும் யூடியூபர்கள் மீது உத்தரப் பிரதேச நீதிமன்றத்தில் அபினவ் அரோரா புகார் அளித்துள்ளார்.தில்லியைச் சேர்ந்த... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதி அருகேயுள்ள கோவிலில் தொல்லியல் துறை ஆய்வு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள கல்கி விஷ்ணு கோவிலில் இந்தியத் தொல்லியல் துறையினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். உ.பி. சம்பல் மாவட்டத்தில் 46 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பழமையான ’பஸ்ம சங்க... மேலும் பார்க்க

கார் மீது சரக்கு லாரி கவிழ்ந்து 6 பேர் பலி!

கர்நாடகத்தில் கார் மீது சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.கர்நாடகத்தில் நெலமங்கலத்தில், சனிக்கிழமை (டிச. 21) நெடுஞ்சாலை 48-ல் சென்று கொண்டிருந்த கார் மீது சரக்கு லாரி ஒன்று மோதியது. காரின் மீது... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் இருவர் பாஜகவில் இணைந்தனர்!

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பல்பீர் சிங், சுக்பீர் தலால் ஆகிய இருவரும் பாஜகவில் இணைந்தனர். பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, கட்சியின் தில்லி பொதுச் செயலர் ஆஷிஷ் சூத், மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகி... மேலும் பார்க்க

'பாஜகவின் பசப்பு அரசியல்' - முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்டம்!

தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லை என்றால் மத்திய அரசுக்கு மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பதிலடி தருவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில... மேலும் பார்க்க