இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் இரண்டாவது பாகம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் நடிப்பில் வெளியான தருணம் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை(ஏப். 25) வெளியாகிறது.
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்த வெளியான எம்புரான் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.
பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி இணைந்து அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் வெளியான நிறம் மாறும் உலகில் திரைப்படம் சன் நெக்ட்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில் உருவான மலையாள மொழிப்படமான அம் ஆ, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான எமகாதகி திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடியிலும் ஜென்டில்வுமன் படத்தை டெண்ட்கொட்டா ஓடிடியிலும் லாக் அவுட் திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்திலும் காணக் கிடைக்கின்றன.
இதையும் படிக்க: சிம்பு 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்!