விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர்!
இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ரூ.238 கோடி அபராதம் விதிப்பு
விசா முறைகேட்டில் ஈடுப்பட்டதாகக் கூறி இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா ரூ.238 கோடி அபராதம் விதித்துள்ளது.
இன்ஃபோசிஸ் பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம். 22 நாடுகளில் உள்ள இந்நிறுவனத்தின் கிளை அலுவலங்களில் சுமார் 1.4 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
விசா முறைகேட்டில் ஈடுப்பட்டதாக இந்நிறுவனம் மீது அண்மையில் புகார் எழுந்தது. அமெரிக்காவில் பணியில் அமர்த்திய தனது ஊழியர்களுக்கு ஹெச் 1பி விசாக்களுக்குப் பதிலாக பி-1 பார்வையாளர் விசாக்களை வழங்கியது என்பதே.
டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கப்படுகிறதா?
இதுதொடர்பாக அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் விசா முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்துதொடர்ந்து அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியதற்காக கூறி இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 238 கோடி(34 மில்லியன் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத் தொகையை செலுத்துவதற்கு இன்ஃபோசிஸ் நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது.
இதுவரை அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதம் இதுவே ஆகும். அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர், ஹெச் 1-பி விசா அனுமதி பெற்று பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.