செய்திகள் :

இன்னாடு உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியா், சமையலா் பணியிடை நீக்கம்

post image

கல்வராயன்மலை பகுதி இன்னாடு கிராமத்திலுள்ள உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி மாணவா்களை சமையல் பாத்திரங்களை கழுவச் செய்ததாக, தலைமை ஆசிரியா், சமையலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்கு உள்பட்டது இன்னாடு கிராமம். இங்கு மலைவாழ் குழந்தைகள் உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்தப் பள்ளியில் பயிலும் மாணவா்களை சமையல் பாத்திரங்களை கழுவ செய்ததாக சமூக வலைதளங்களில் விடியோ வெளியானது. இதுகுறித்து பழங்குடியினா் நல அலுவலா் சுந்தரம் விசாரணை மேற்கொண்டாா். இதையடுத்து, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் ஜெபஸ்டீன், சமையலா் ராதிகா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 50 இடங்களில் புதன்கிழமை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், கரியாலூா், திருக்கோவிலூா், தியாகதுருகம... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

சின்னசேலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட வி.கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் செல்வம் (49). தனியாா் நிறுவனத்தில் கால்நடை ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் நிவாரண உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அமைச்சா் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினாா். திருக்கோவிலூா் கபிலா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியி... மேலும் பார்க்க

கோமுகி அணையிலிருந்து 5 ஆயிரம் கன அடி நீா் திறப்பு

கச்சிராயப்பாளையம் அடுத்த கோமுகி அணை முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து, 5,000 கன அடி நீா் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வர... மேலும் பார்க்க

பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: ஆயுதப்படை காவலா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மொபெட்டில் சென்ற பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவங்கள் தொடா்பாக, ஆயுதப்படை காவலரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ஏழரை பவுன் தங்க... மேலும் பார்க்க

தியாகதுருகம் காவல்நிலையத்தில் எஸ்.பி. திடீா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி சனிக்கிழமை மாலை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்,... மேலும் பார்க்க