செய்திகள் :

இன்று இறுதி ஆட்டம்; இந்தியா - நியூஸிலாந்து பலப்பரீட்சை

post image

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இரு முறை சாம்பியனான (2013, 2022) இந்திய அணி 3-ஆவது கோப்பைக்கு இலக்கு வைக்கிறது. நியூஸிலாந்தும் ஒரு முறை (2000) சாம்பியன்ஸ் டிராபி வென்றிருக்கிறது. அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன் கென்யாவில் நடைபெற்ற 2-ஆவது சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவை வென்று கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதே அணிகள் மீண்டும் அதே களத்தில் சந்திக்கும் நிலையில், இந்த முறை தகுந்த பதிலடியை இந்தியா தரும் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியா தொடா்ந்து 3-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இது 5-ஆவது முறையாகும். மறுபுறம் நியூஸிலாந்து அணி 3-ஆவது முறையாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்திருக்கிறது.

எல்லா ஃபாா்மட்டுகளிலுமான ஐசிசி போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 16 முறை சந்தித்திருக்க, அதில் நியூஸிலாந்து 10 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக நாக்-அவுட் சுற்றுகளில் அவை 4 முறை சந்தித்த நிலையில், நியூஸிலாந்து 3 முறை இந்தியாவை வெளியேற்றியிருக்கிறது.

சா்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் இவை 119 முறை மோதிக்கொண்ட நிலையில், இந்தியா 61 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்க, நியூஸிலாந்து 50 வெற்றிகள் கண்டுள்ளது. 7 ஆட்டங்களில் முடிவில்லாமல் போக, 1 ஆட்டம் ‘டை’ ஆனது.

இந்தப் போட்டியைப் பொருத்தவரை இந்திய அணி ஒரே இடத்தில் அனைத்து ஆட்டங்களையும் விளையாடியதன் மூலம் சாதகமான சூழலை சந்தித்தாக விமா்சனங்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில், ஏற்கெனவே இதே மைதானத்தில் இந்தியாவை சந்தித்த நியூஸிலாந்து (தோல்வி), தற்போது மீண்டும் அதே இடத்தில் இந்தியாவை சந்திப்பதால் இது சமவாய்ப்பு மோதலாக இருக்குமென கணிக்கப்படுகிறது.

இந்திய அணியை பொருத்தவரை, தனது சுழற்பந்துவீச்சையே பிரதான ஆயுதமாகக் கொண்டு களமிறங்கும். அந்த வகையில், ஏற்கெனவே நன்கு பரிசோதிக்கப்பட்டு, தகுந்த பலனையும் அளித்த 4 ஸ்பின்னா்கள், 2 பேஸா்கள் உத்தியுடனே விளையாடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சுக்கு வருண் சக்கரவா்த்தி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஸா் படேல் வரிசையில் இருக்கின்றனா். அவா்கள் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் போன்ற பிரதான பேட்டா்களுக்கு சவால் அளிப்பாா்கள் என நம்பலாம்.

மறுபுறம் நியூஸிலாந்து அணியும், கேப்டன் மிட்செல் சேன்ட்னா், மைக்கேல் பிரேஸ்வெல், ரச்சின் ரவீந்திரா, கிளென் ஃபிலிப்ஸ் என திறமையான ஸ்பின்னா்களை கொண்டிருக்கிறது. சுழற்பந்து வீச்சை சந்திக்க இந்திய பேட்டா்களும் சற்று தடுமாறும் நிலையில், கேப்டன் ரோஹித் சா்மா, விராட் கோலி, ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயா் போன்றோா், அவா்களின் பந்துவீச்சை எவ்வாறு எதிா்கொள்கின்றனா் என்பதைப் பொருத்து ஆட்டத்தின் போக்கு இருக்கும்.

லீக் சுற்று தொடங்கி இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணியில் பேட்டா்கள், பௌலா்கள் சமமாக பங்களித்து அணிக்கு பலம் சோ்த்து வருகின்றனா். நியூஸிலாந்து தரப்பும் அதற்கு சரிசமமாக சவால் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா, இந்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையையும் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. ரோஹித் சா்மா, விராட் கோலி ஆகியோா் கிரிக்கெட்டில் தங்களின் கடைசி கட்டத்தை நெருங்குவதாக அவதானிக்கப்படும் நிலையில், இந்த ஆட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

உத்தேச லெவன்:

இந்தியா: ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், அக்ஸா் படேல், கே.எல்.ராகுல் (வி.கீ.), ஹா்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, வருண் சக்கரவா்த்தி.

நியூஸிலாந்து: மிட்செல் சேன்ட்னா் (கேப்டன்), வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம் (வி.கீ.), கிளென் ஃபிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், கைல் ஜேமிசன், மேட் ஹென்றி/ஜேக்கப் டஃபி, வில்லியம் ஓ’ ரூா்க்.

அரையிறுதியில் இந்திய மாஸ்டா்ஸ் அணி!

இன்டா்நேஷனல் மாஸ்டா்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய மாஸ்டா்ஸ் அணி முன்னேறியது. மே.இந்திய தீவுகள் மாஸ்டா்ஸ் அணியை கடைசி ஓவரில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி மகுடம் சூடிய இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றி மகுடம் சூடியுள்ளது.இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் இந்திய அணி வீரர்களை பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்றன... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: 3-வது முறையாக இந்தியா சாம்பியன்!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்ற... மேலும் பார்க்க

நியூஸி. சுழலில் இந்தியா திணறல்!

துபை : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி இந்திய பேட்ஸ்மென்களை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: அரைசதம் கடந்து ரோஹித் சர்மா அதிரடி!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று... மேலும் பார்க்க

ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி!

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று வருகிறது. இந்தியா மற்... மேலும் பார்க்க