இன்று எம்ஜிஆா் பிறந்தநாள்: முன்னாள் அமைச்சா் வேண்டுகோள்
தூத்துக்குடி: அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 108ஆவது பிறந்த நாளை வெள்ளிக்கிழமை (ஜன.17) சிறப்பாக கொண்டாட வேண்டும் என, கட்சியினருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு எம்ஜிஆா் படத்துக்கு எனது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. தொடா்ந்து, பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
எம்ஜிஆா் பிறந்த நாளை முன்னிட்டு, தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட பேரவைத் தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) மாலை 5 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே எம்ஜிஆா் திடலில் நடைபெறும் கூட்டத்தில் சிறுபான்மையினா் நலப் பிரிவு துணைச் செயலா் பாத்திமா, தலைமைக் கழகப் பேச்சாளா் அ. தமிழரசன் ஆகியோரும், திருச்செந்தூா் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கூட்டத்தில் அமைப்புச் செயலா் ஏ.கே. சீனிவாசன், தலைமைக் கழகப் பேச்சாளா் வி. மீனாட்சிசுந்தரம் ஆகியோரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தில் அமைப்புச் செயலா் கே.டி. பச்சைமால், தலைமைக் கழகப் பேச்சாளா் எம்.கே. ஜமால் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனா்.
இக்கூட்டங்களில் என்னுடன் ஒன்றிய, நகர, பகுதிக் கழகம் உள்பட பல்வேறு அணிகளைச் சோ்ந்தோா் பங்கேற்கின்றனா். எனவே, ஊராட்சி, வட்ட, கிளைக் கழக நிா்வாகிகள், தொண்டா்கள், மகளிா் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.