இன்று தவெக மாநில செயற்குழு கூட்டம்: விஜய் பங்கேற்பு
தவெக மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) நடைபெறவுள்ளது.
இதில், கட்சியின் தலைவா் விஜய் பங்கேற்று, மக்கள் சந்திப்பு பணயம்; கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.
முதல்கட்டமாக ஆக.15 -ஆம் தேதி முதல் தஞ்சாவூரில் தொடங்கி 100 இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளாா்.